பாஜகவின் எச்.ராஜா எங்களை நெல்லிக்காய் மூட்டை என்றும், தற்போது பாரம் குறைந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார். நாங்கள் விரல் காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான் எச்.ராஜா, அவருக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளார்.
அதிமுக பல துரோகங்களை சதிகளை எதிர்கொண்டு இன்று பொதுச்செயலாளர் தலைமையில் வலிமையாக உள்ளது என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி;- தமிழக அரசியலில் நம்பகத்தன்மை இல்லாத ஒரே நபர் பண்ருட்டி ராமசந்திரன் மட்டும்தான். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி உட்பட யாருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. அரசியலில் நம்பிக்கை துரோகத்திற்கு உதாரணம் காட்ட பண்ருட்டி ராமசந்திரன் பெயரை கூறுவது வழக்கம். வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக பல துரோகங்களை சதிகளை எதிர்கொண்டு இன்று பொதுச்செயலாளர் தலைமையில் வலிமையாக உள்ளது.
பாஜகவின் எச்.ராஜா எங்களை நெல்லிக்காய் மூட்டை என்றும், தற்போது பாரம் குறைந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார். நாங்கள் விரல் காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான் எச்.ராஜா, அவருக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளார். 2026ம் ஆட்சிக்கு வரவேண்டியதுதான் எங்கள் இலக்கு. இதில், எங்கிருந்து வந்தார்கள் பாஜக. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இவர்களை எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிய வரும். கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து பாஜக அரசின் பல மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு வழங்கியது.
காவிரியில் தண்ணீர் திறக்க மேலாண்மை குழு அறிவித்த பின்பும் நீதிமன்றத்தை நாடுவது கர்நாடகா அரசின் தவறான அணுகுமுறையாகும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செயல்படத் தவறும் பட்சத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும், 2026 சட்டப்பேரவை தேர்தல் இரண்டிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாகும் கூட்டணியே தேர்தலை சந்திக்கும் என கே.பி முனுசாமி கூறினார்.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என பாஜக கோரியதால்தான் கூட்டணியிலிருந்து விலகினோம் என சமூகவலைதளங்களில் வந்த தகவலையே முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரியாமல் தவறான தகவலை தெரிவித்துவிட்டார் என கே.பி.முனுசாமி விளக்கமளித்துள்ளார்.