சாதிக்கிறார் சசிகலா -முதல் கையெழுத்தே தாய்மார்களுக்குத்தானாம்

First Published Jan 3, 2017, 12:19 PM IST
Highlights


தமிழக அரசியலில் முக்கிய தலைவராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக உடையும் என்று அனேகம் பேர் எதிர்பார்த்தனர். அதிருப்தி எப்படியும் உருவாகும் அதிமுகவிலிருந்து 20 எம்.எல்.ஏக்கள் வெளியேறினால் கூட ஆட்சி கவிழ்ந்துவிடும் என எதிர் பார்த்தனர்.

கட்சிக்கு சவாலாக இருக்கப்போகிறார்கள், சசிகலாவை ஏற்றுகொள்ளாத தொண்டர்களின் பிரதிபலிப்பாக இருக்கப்போகிறார் என்று எண்ணப்பட்ட செங்கோட்டையன் முதலில் போய் தனது ஆதரவை முந்திகொண்டு சொன்னார். பொதுச்செயலாளராக நீங்கள் வரவேண்டும் என்று பகீரங்கமாக கூறினார். 

அடுத்து பி.எச்.பாண்டியன் , கேபி.முனுசாமி என பெரிய பட்டியலும் , தம்பித்துரை டெல்லியில் மோடியுடன் சேர்ந்துவிட்டார், மோடியின் சாய்ஸ் தான் ஓபிஎஸ் அவரும் எதிராக காய் நகர்த்த துவங்கிவிட்டார் என்று சொல்லப்பட்டதை எல்லாம் உடைத்து சிறுக சிறுக வலுபெற்றார் சசிகலா.

அதிருப்தியாளர்கள் பல மட்டங்களில் பேசப்பட்டனர் , மாவட்டசெயலாளர்களுக்கு பெரும்பாலும் அவர்கள் அமைச்சர்களாக இருந்ததால் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது. உங்களுக்கு கீழ் இருக்கும் அணிகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுடையது என்று உணர்த்தப்பட்டது. 

நாலரை ஆண்டுகால ஆட்சி கட்சியையும் உடையாமல் பார்த்துகொள்ளவேண்டும் என்று அதிருப்தியாளர்களிடம் பேசப்பட்டது. முடிவில் கட்சி தலைமை என்றால்  அது  சசிகலா மட்டுமே என்று ஒருகுரலில் ஆரம்பித்தது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. 

முடிவில் அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. பின்னர் பொறுப்பேற்க வந்த போது இவர் என்ன பேசி விடப்போகிறார் என்று நினைத்தவர்கள் வாயடைக்கும் வண்ணம் உருக்கமாக ,தெளிவாக , உறுதியாக பலவிதங்களில் தயாரிக்கப்பட்ட உரையை தெளிவாக படித்தார்.

இதன் மூலம் தன்னால் கட்சித்தலைமையை திறம்பட செய்ய முடியும் என்ற தோற்றத்தை உருவாக்கினார். மாற்றுகட்சிதலைவர்கள் குறிப்பாக திக வீரமணி போன்றோர் ஆதரவையும் பெற்றது ஹைலைட்.

கட்சி கிட்டதட்ட சசிகலாவின் ஆளுமைக்கு கீழ் வந்துவிட்டது. இனி அடுத்த அடி முதல்வர் பதவி. இதற்கு தோதாக ஏற்கனவே மதுசூதனன் , உதயகுமார் போன்றோர் குரல் கொடுத்து வைக்க கடம்பூர் ராஜு வழிமொழிய நேற்று பரம எதிர்ப்பாளர் தம்பிதுரை தனது அறிக்கையின் மூலம் முடித்து வைத்துவிட்டார்.

இதை பாஜக தலைமை கூட எதிர்பார்க்கவில்லை, அது வெங்கய்யா நாயுடுவின் பேட்டியிலும் வெளிப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பதவியை சசிகலா ஏற்க முடிவு செய்துவிட்டார், அதற்கு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஓபிஎஸ் அகற்றப்பட போகிறார். ஆகவே 13 அல்லது 14 ஆம் தேதிகளில் அவர் முதல்வராக பதவி ஏற்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

எல்லாம் சரி பொதுமக்கள் ஆதரவு குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியான பெண்கள் ஆதரவை பெற என்ன செய்வது . அதற்கான திட்டமும் தயார் என்கின்றனர். விரைவில் முதல்வராக பதவி ஏற்க உள்ள சசிகலா அதற்கும் தயாராக திட்டம் வைத்துள்ளாராம்.

அது முதல்வர் ஜெயலலிதாவே முடிவெடுக்க தயங்கிய மதுவிலக்குத்தான் என்கிறார்கள். முதல் கையெழுத்தே மதுவிலக்கு என்றால் நிச்சயம் தாய்மார்கள் உள்ளத்தில் ஜெயலலிதா வழியில் சின்னம்மா என்ற அண்ணம் அழுத்தமாக பதியும் , ஜெயலலிதாவையும் தாண்டி உறுதியான முடிவெடுத்த சின்னம்மா என்று கூட பிரச்சாரம் அமையும் என்பதால் பொங்கல் பரிசாக இது அமையும் என்கின்றனர். 

click me!