நாளை பொதுச்செயலாளராக பதவி ஏற்பு - ஜெ சமாதியில் சசிகலா கண்ணிர் அஞ்சலி 

First Published Dec 30, 2016, 8:38 PM IST
Highlights


நாளை பொதுச்செயலாளராக பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று ஜெயலலிதா சமாதிக்கு வந்த சசிகலா அவரது சமாதியில் பொதுக்குழு தீர்மானத்தை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 
முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணமடைந்தார். அதன் பின்னர் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. ஓபிஎஸ் முதல்வரானார்.  கட்சியின் புதிய பொதுச்  செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தினர். 
பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம்  நேற்று கூடியது,இதில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


 இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் சென்று போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். சசிகலாவும் அதை ஏற்றுகொண்டார்.


இதை தொடர்ந்து சசிகலா இன்று  மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.  ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து, கண்ணீர் மல்க தரையில் விழுந்து சசிகலா அஞ்சலி செலுத்தினார். 


பின்னர் அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார். சசிகலாவுடன்  முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், தம்பிதுரை மதுசூதனன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
நாளை காலை 11.30 மணிக்கு முறைப்படி சசிகலா பொதுச்செயலாளராக கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார். 

click me!