போனில் பேசுவதை டேப் செய்யும் திறமைபடைத்த அண்ணாமலை.. Voter List குளறுபடியை கண்டறிந்திருக்கலாமே-செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Apr 26, 2024, 12:21 PM IST

கோவை தேர்தலில் தனக்கு ஆதரவாக சரியான முறையில் வாக்குப்பதிவு இல்லை என்பதாலும்,  தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டதாலும் அண்ணாமலை வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் என மாற்றி பேசுவதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம்

மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தின் வாசலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில்,  நீர்,மோர் பந்தல் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 52ஆண்டுகளாக மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக. தமிழகத்திற்கு யார் நல்லது செஞ்சாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி என கூறினார்.  வாக்காளர்கள் பல பேர் பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது.  இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா என்ன சொல்வது எனத்தெரியவில்லை. எல்லா மாவட்டங்களிலும் அப்படித்தான் உள்ளது என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

அதிபுத்திசாலி அண்ணாமலை

அரசியல் கட்சியினர் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள் அப்போது பூத் சிலிப்பை அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் கொடுத்தார்கள். இப்போது திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் அதிகம் கவம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டியவர். தேர்தல் ஆணையம் கட்சியினர் பூத் சிலிப் வழங்கும் வகையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து அதிபுத்திசாலி ஐபிஎஸ் படித்தவர் தற்போது பேசுகிறார். தேர்தலுக்கு  முன்னரே ஏன் பேசவில்லை. குறிப்பாக பாஜக வாக்காளர்கள் தூக்கப்பட்டு விட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே தேர்தல் ஆணையத்திடம் கூறவில்லை என கேள்வி எழுப்பினார். 

போன் டேப் செய்ய தெரிகிறது..

தேர்தலில் தனக்கு ஆதரவாக சரியான வாக்குப்பதிவு இல்லை. தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று மாற்றி பேசுகிறார். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை  வாக்காளர் பட்டியலில் பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? என விமர்சனம் செய்தார். ஒரு மதத்தை குறி வைத்து பேசுவது உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் பேசுவது சரியல்ல எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

வாக்களித்த அடையாளத்தை காட்டினால் இலவச பீர், பட்டர் தோசை.. வாக்காளர்களை கவர அதிரடி அறிவிப்பு- எங்கே தெரியுமா.?

click me!