"விரிச்சாச்சு வலை... விழுந்தாச்சு திருமா..." - உடைகிறது மக்கள் நலக்கூட்டணி..!!

First Published Oct 24, 2016, 8:04 AM IST
Highlights


கொள்கை அளவில் இணையும் கூட்டணியே கவுரவம் , ஈகோ பிரச்சனையால் உடைவது வரலாறு. வேறு வழியில்லாமல் இணைந்தவர்கள் இவ்வளவு நாள் நீடித்ததே பெரிய விஷயம். மக்கள் நலக்கூட்டணியில் நடக்கும் உள்குத்துகள் பற்றி கேட்டபோது ஒரு அரசியல் நண்பர் நம்மிடம் பேசிய கருத்துதான் இது.

எப்படி? என்று கேட்ட போது அவர் திரும்ப எதிர் கேள்வி கேட்டார். ஒவ்வொருவரும் வெளியே வந்தது எப்படி சொல்லுங்கள் என்று. திருமாவளவன் ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால் வெளியே வந்தார். இடதுசாரிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே அதிமுகவுடன் பிரச்சனை ,திமுகவுடன் போக கூஉடாது என்று பிரச்சனை ஆகவே கழகங்கள் உடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாடு எடுத்தனர். வைகோவும் அதே நிலைதான். அதனால் மக்கள் நலகூட்டணி உருவானது. 

சரி இப்ப சொல்லுங்கள் ஸ்டாலின் பிரச்சனை தீர்ந்து அவரே திமுகவுக்கு அழைத்தால் திருமாவுக்கு மாற்றி யோசிக்க எதாவது சிக்கல் இருக்கா? என்றார். நானும் இல்லை என்றேன். கூடவே “  பாஸ் அப்ப திரிஷா கதி “ என மயில்சாமி வடிவேலிடம் கேட்பது போல் சார் அப்ப மக்கள் நலக்கூட்டணியின் கதி என்று வெள்ளந்தியாக அவரை கேட்டேன்.

அவரு எப்ப சார் சொன்னார் மக்கள் நலக்கூட்டணி அப்படியே தொடரும்னு சொன்னாரா? ஏதோ இணைந்தார்கள் , சட்டசபை தேர்தலில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்தார்கள். மக்கள் நம்பிக்கையும் வளர்ந்து வந்தது ஆனால் அதை போட்டு உடைத்தது தர்மரும் , அர்ஜுனரும் தான்.மஹாபாரத போரில் முக்கிய பாத்திரங்களே அர்ஜுனர் மற்றும் தர்மரே. இதில் தர்மர் என தன்னை சொல்லிக்கொண்ட வைகோ பிரச்சார ஆரம்பத்தில் ஸ்டாலினுக்கு எதிராக சாதிக்பாட்சா மேட்டரை கையிலெடுத்தார். 

அப்புறம் ஏனோ அதை தூக்கி ஓரம் வைத்துவிட்டார். அடுத்து தேவர் மற்றும் இம்மானுவேல் சேகரன் விவகாரத்தை கையிலெடுத்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றது. , அடுத்து தர்மர் விஜயகாந்த். இவர் ஏன் பிரச்சாரத்துக்கு வந்தார்,என்ன பேசினார், என்ன சொல்ல வந்தார் யாருக்கும் தெரியாது. 

திமுக , அதிமுக எனும் சக்தி வாய்ந்த பணபலம் , ஆள் பலம் முன்பு நன்றாக பெர்ஃபாமென்ஸ் செய்தாலே வெல்வது கடினம், இவர்களின் சொதப்பல் மநகூவை அதல பாதாளத்துக்கு தள்ளியது.

அதன் பின்னர் திருமாவளவ்ன் கொடுத்த முதல் பேட்டியில் கழகங்களுடன் கூட்டணி எனபது பற்றி மறு பரிசீலனை செய்வோம் என்றார். இதுபற்றி மநகூட்டணி தலைவர்களுடன் பேசுவேன் என்றார். இங்குதான் திருமாவின் முதல் சறுக்கல் ஆரம்பமானது. 

பொதுவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பித்தது முதலே திமுக ,அதிமுக சார்ந்தே இயங்குகிறது. தொண்டர்களும் இப்படியே வளர்ந்துவிட்டனர். முதலாளித்துவ கட்சிகளில் அரசியல் பிரவேசம் என்பதே ஆதாயத்தை மையப்படுத்திதான். லட்சியம் எல்லாம் பிறகுதான்.

இது போன்ற சூழ்நிலையில் வளர்ந்த விடுதலைசிறுத்தைகள் தொண்டர்கள் இடதுசாரிகளுடன் , மதிமுகவுடன் ஒன்றாக அரசியல் பயணம் செய்தது , அவர்களால் இயலாத காரியமாக இருந்தது. தேர்தல் முடிவுகள் திமுக , அதிமுக தான் என்பதை உணர்த்தியதால் இனி கட்சியை நடத்த வேறு முடிவை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு திருமா அப்போதே வந்து விட்டார்.

அதிமுக கதவுகள் சாத்தப்பட்டு திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டனர். ஒரே நம்பிக்கை திமுக , அதனால் தான் முதலில் திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டம் காலம் கடந்த முயற்சி என விமர்சித்த திருமா அந்தர் பல்டி அடித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக திமுக அறிவிப்பதற்கு முன்பே திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக கலந்துகொள்ளும் என அறிவித்தார். என்றார். ஏன் இடது சாரிகள் கூட திமுக கூட்டிய அனைத்து விவசாய சங்க கூட்டத்தினருக்கு சங்கங்களை அனுப்பவில்லையா ? என்று கேட்டேன். 

அதன் பின்னர் திமுக 25 ஆம் தேதி திமுக அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததும் அனைத்து முக்கிய எதிர்கட்சிகளும் வரவில்லை என்று சொல்லிவிட்டன. ஸ்டாலின் கூட்டிய விவசாய சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட இடதுசாரிகள் கூட அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த நிலையில் நாளை முடிவெடுப்பதாக திருமா மட்டும் கூறுகிறாரே ஏன் என்று கேட்டார்? 

நீங்களே சொல்லுங்கள் என்றேன். திமுகவில் தடையாக இருக்கும் மு.க.ஸ்டாலினிடமிருந்தே அழைப்பு வந்திருக்கலாம், சிக்னல் கிடைத்திருக்கலாம் , அதனால்  ம.ந.கூ வை கை கழுவ தயாராகி விட்டார்.அதற்காக த்தான் இந்த நிர்வாகி கூட்டம் எல்லாம். உண்மையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு செல்லும் முடிவை எடுக்க போகிறார். 

பின்னர் இடைதேர்தலிலும் திமுக ஆதரவு நிலை எடுக்க வாய்ப்பு உண்டு இதன் மூலம் மக்கள் நலக்கூட்டணியில் பிளவு வர வாய்ப்பு உண்டு என்றார். பெரும்பாலும் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையும் அப்படித்தான் உள்ளது என்பதால் நாளை விசிக கூட்டம் ஒரு மாறுதலை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று நினைக்கத்தான் வேண்டி உள்ளது.  - முத்தலீஃப் 

click me!