காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமாரின் மரணத்தில் சமாதானத்திற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை காவல் துறையினர் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்டத்தில் வலிமையான மாவட்ட தலைவரை நாங்கள் இழந்துள்ளோம்.
ஜெயக்குமாரின் மர்ம மரணத்தில் எனக்கு தொடர்பா? MLA ரூபி மனோகரன் பரபரப்பு விளக்கம்
undefined
காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் தங்களது மாவட்ட தலைவர் ஜெயக்குமார் குடும்பத்தினரின் புகாரை ஏற்று நேர்மையான முறையில் விசாரணை செய்ய வேண்டும். அதேபோல மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவுகள் செய்ய தெரிவித்துள்ளதாக கூறினார்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரின் படுகாலைக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் - ராமதாஸ் காட்டம்
மேலும், யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். கட்சி ரீதியாகவும், தாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம். ஜெயக்குமார் இறப்பில் எந்த ஒரு சமாதானமும் கிடையாது. காங்கிரஸ் மாவட்ட தலைவருக்கே திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, அண்ணாமலை இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு என்ன வேலை? ஒரு இழப்பை கொச்சைப்படுத்தி அரசியலாக்க கூடாது என தெரிவித்தார்.