கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஆட்டத்தை வேடிக்கை பார்க்கும் ஜெயக்குமார்.!ஜூனியர் எம்.ஜி.ஆர் பரபரப்பு குற்றச்சாட்டு

By Ajmal KhanFirst Published Jun 29, 2022, 2:50 PM IST
Highlights

ஒற்றை தலைமை வேண்டுமெனில் ஓ பன்னீர் செல்வத்தை ஒற்றை தலைமையாக நியமிக்க வேண்டும் எனவும், அவரை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக ஜூனியர் எம்ஜிஆர் தெரிவித்துள்ளார்

குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக இபிஎஸ் வர வேண்டும் என கூறி வருகின்றனர். சுமார் 68 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணிக்கோ 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் அவரது பேரனான ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அதிமுக கட்சி கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை உருவாக்கிய எம் ஜி ஆர் கட்சியை தொடர்ந்து கட்டுகோப்பாகவும் பாதுகாப்பாக வழி நடத்தினார் எனவும் அவரது காலத்துக்கு பின்னர் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஜெயலலிதாவிடம் வழங்கியதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் வரும்போது கட்சி சட்ட விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது ஒற்றை தலைமை ஏற்படுவதற்கான அவசியம் ஏற்படவில்லை எனவும் தற்போதைய விவகாரத்தால் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மிகுந்த ஒரு குழப்பத்துடனும் கட்சியின் எதிர்காலம் குறித்து ஒரு பயத்துடனும் தொடர்ந்து தங்களுடன் பேசி வருவதாக தெரிவித்தார்

நமது அம்மா நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்!வெறுப்பில் பதவியை தூக்கி எறிந்த மருது அழகுராஜ்

எம்ஜிஆர் வீட்டிற்கு இபிஎஸ் வந்ததில்லை


எம்ஜிஆரின் கட்சிக்கு சொந்தம் கொண்டாட விரும்பும் இபிஎஸ் இதுவரை ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு வந்ததில்லை என்றும் முன்னாள் அமைச்சர்கள் இபிஎஸ் ஆகியோர் வெறும் பேனர் மற்றும் போஸ்டர்களின் மட்டுமே எம்ஜிஆர்க்கு மரியாதை அளிப்பதாக தெரிவித்தார். கட்சியின் தீவிர விசுவாசியான ஓபிஎஸ், ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு அவர்களால் பாராட்டப்பட்டவர் என்றும் கட்சித் தொண்டர்களும் மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக சிறந்த தலைவராக ஓபிஎஸ் திகழ்வதாக கூறினார்.  எடப்பாடி பழனிச்சாமி அவ்வாறு அணுக முடியவில்லை எனவும் அவருடன் இருக்கக்கூடிய நிர்வாகிகள் தங்களது பதவி பறிபோய்விடும் என்ற காரணத்திற்காக மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து வருவதாகவும் கட்சி தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருகிறார? இது என்ன புது டுவிஸ்டா இருக்கு

சன்னி லியோன் நடனத்தை பார்க்கும் ஜெயக்குமார்

கட்சி விவகாரங்களை பேசி தீர்க்காமல் நீதிமன்றத்திற்கு சென்றது கண்டிக்கத்தது என்றும் பொதுக்குழுவை ஓபிஎஸ்யை அவமானப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். தனது ஆதரவு ஓபிஎஸ்க்கு தான் என்றும் அவரை ஆதரித்து தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் செல்லவும் தயாராக இருப்பதாகவும் இதற்காக தனது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டாலும் கவலை இல்லை என தெரிவித்தார். எம்ஜிஆர் பேரனான நான் எம்ஜிஆர் அவர்கள் போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி அதனை தடுத்து விட்டதாகவும் மாறாக கட்சி மேடைகளில் எம்ஜிஆர் பாடல்களை தவறாக பாடுவதாகவும் வேதனை தெரிவித்தார். அதிமுக மூத்த அமைச்சரான ஜெயக்குமார் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

மேயர் அங்கியோடு உதய் காலில் விழுவதுதான் திராவிட மாடலா? திமுகவின் சட்டையை பிடித்து உலுக்கும் ஆர்.பி.உதயகுமார்

 

click me!