அரசியல் லாபத்துக்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம்: பி.ஆர்.பாண்டியன்

First Published Oct 24, 2016, 8:11 AM IST
Highlights


நவம்பர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை பிரசார பயணத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்த பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தாமிரபரணி, காவிரி, முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் மத்திய அரசு அச்சப்பட்டுள்ளது.

வருகிற 25 ஆம் தேதி தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி பிரச்சனைக்காக கூட்டப்படும் அனைத்தக்கட்சி கூட்டத்தில் கட்சி பாகுபாடின்றி, விவசாயிகளின் நலனுக்காக அனைவரும் பங்குகொள்ள வேண்டும்.

அனைத்து கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் விவசாயிகளுக்கு தீங்கு செய்யும் நோக்கில் இருப்பதாக உள்ளார்கள். அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட்டத்திற்கு களங்கம் கற்பிக்கக் கூடாது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாய பிரச்சனைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்று திரளும்போது அரசியல் லாபத்துக்காக அனைத்து கட்சி கூட்டத்தை களங்கம் கற்பிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும், நவம்பர் 5 - 11 தேதி வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை பிரசார பயணம் நடத்த உள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் கூறினார்.

click me!