மக்களுக்கான பிரச்சினைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன, அதை விடுத்து அண்ணாமலையின் வாட்ச், பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்றது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள பாலாஜி அவென்யூவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக்கு கருவிகள் அமைத்து அரசின் சார்பில் பராமரிப்பது குறைவாக உள்ளது.
கோவை மாநகர் முழுவதும் சாலைகள் மோசமாக உள்ளது. அதிகமாக மக்கள் பயன்படுத்தும் சலிவன் வீதி, செட்டி வீதிகள் கூட மோசமாக உள்ளன. இரண்டு மாதத்திற்கு முன்பு போட்ட தண்ணீர் பந்தல் சாலைகளும் மோசமாக உள்ளன. மழைக்குப் பின்பு அந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் வார்த்தையாக சொல்கிறார். சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி ஒரு வாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் போராட்டம் அறிவிக்க உள்ளார்.
சிறுபான்மையினரின் கல்விக்கு தடை விதிக்கவே நிதியுதவி நிறுத்தம் - அமைச்சர் மஸ்தான்
குடிநீர் பிரச்சினைகள், சாக்கடை, சாலை என பல பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றது. அடுத்த வாரிசை முதல்வர் அழகு பார்க்கிறார். தன்னுடைய மகனை அமைச்சராக்கியதன் வாயிலாக குடும்பத்தின் கட்சியாக மாறியுள்ளது.
ஜனநாயக அமைப்புகளில் குடும்ப அரசியலுக்கு இடமே இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக திமுக இல்லை. ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்த்த கட்சி திமுக. தற்போது புதியவர்களுக்கு, திறமைசாலிகளுக்கு திமுக வாய்ப்பு கொடுப்பதில்லை. பாஜகவின் அனைத்து கட்சி பொறுப்புகளும் குறிப்பிட்ட காலம் மட்டும் தான். ஜனநாயக ரீதியாக செயல்படுகிறது. பாஜக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த நடிகர்கள் உதவ வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
அண்ணாமலையின் வாட்ச் , சட்டை, பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்றது. மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. திமுக எட்டு வழி சாலை அமைப்பதில், விமான நிலையம் அமைப்பதில் என்ன பேசினார்களோ அதை மக்கள் பேசுகின்றனர். திமுக இரட்டை வேடம் போட்டுள்ளது. அன்னூர் விவகாரத்தில் விவசாயிகளுடன் அமைச்சர்கள் உட்கார்ந்து பேச வேண்டும்.