மக்களுக்காக போராட்டம் நடத்துவது போல் நாடகமாடிய திமுக.!ஆட்சிக்கு வந்ததும் மக்களின் குரல்வளையை நெரிப்பதா.?சீமான்

By Ajmal Khan  |  First Published Dec 19, 2022, 3:56 PM IST

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
 


பரந்தூர் விமான நிலைம்- போராட்டம்

பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிராம உரிமை மீட்பு பேரணி நடத்ததிட்டமிட்டுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்திருந்தனர்.இந்தநிலையில்  கிராம மக்களின் பேரணியையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டடுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது... (1/4)

— சீமான் (@SeemanOfficial)

Tap to resize

Latest Videos

 

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச பயங்கரவாதத்தின் அடையாளமாகும்.மக்களின் தொடர் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்திநிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதே எதேச்சதிகாரத்தினைக் காட்டும் நிலையில், அதனை எதிர்த்து மக்களாட்சி உரிமைக்கொண்டுப் போராடுபவர்களை அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை.! ஒப்புதல் அளிக்காத ஆளுநர்.! தமிழக அரசு 162வது பிரிவை பயன்படுத்த வேண்டும்-அன்புமணி

அழிவுத் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா? எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

விற்பனையாகாமல் இருக்கும் 8000 வீட்டு வசதி வாரிய வீடுகள்..! வாடகை வீடுகளாக மாற்றப்படும் - அமைச்சர் முத்துசாமி


 

click me!