
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி அருகே உள்ள கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, 4 கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரது வாகனத்தை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்தனர்.
மேலும், காரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் வந்த ஊராட்சிமன்ற துணை தலைவர் வேட்பாளர் திருவிகவை அந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தத புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சினிமா பாணியில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.