விற்பனையாகாமல் இருக்கும் 8000 வீட்டு வசதி வாரிய வீடுகள்..! வாடகை வீடுகளாக மாற்றப்படும் - அமைச்சர் முத்துசாமி

By Ajmal KhanFirst Published Dec 19, 2022, 2:17 PM IST
Highlights

வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்படும் வீடுகள் மக்களின் தேவைகள், விருப்பங்கள் அறிந்து கட்டப்படும் என்றும் இதன் மூலம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ள நிலை மாறும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி வாரிய வீடுகள்

சென்னை நந்தனத்தில் வீட்டு வசதித்துறை சார்பில் நந்தனம் நியூ டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்புகளை வீட்டு வசதி தெரிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை மேலாண் இயக்குனர் சரவணவேல் ராஜ் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, சென்னை நந்தனத்தில் மிகவும் மோசமாக பழுதடைந்த நந்தனம் நியூ டவர் 62 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததையடுத்து அவை இடிக்கப்பட்டு தற்போது 102 வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டப்பட்டுள்ளதாகவும் இவை முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் வீடுகள் வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தேசிய பதவி கனவில் ஸ்டாலின்..! கம்யூனிஸ்ட் ஆட்சியிடம் மண்டியிடும் திமுக அரசு-அண்ணாமலை ஆவேசம்

61 பழைய குடியிருப்புகள் இடிப்பு

வீட்டு வசதி துறை சார்பில் செய்யப்பட்டு வரும் திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் மேலும் பல புதிய திட்டங்கள் வீட்டு வசதி துறை சார்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறினார். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்ட 61 பழைய வாடகை அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதியதாக வாடகை குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.சுயநிதி குடியிருப்பு திட்டங்கள் மூலம் 10 இடங்களில் வசிக்கும் மக்களின் தேவைகளை விருப்பங்களை அறிந்து வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

வாடகை வீடுகளாக மாற்றப்படும்

கடந்த அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டு 8000 வீடுகள் விற்பனையாகாமல் இருந்த நிலையில் அவற்றில் சில வீடுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வரும் காலங்களில் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்படும் வீடுகள் மக்களின் தேவையை அறிந்து கட்டப்படும் இதன் மூலம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது என்ற நிலை மாற்றப்படும் என கூறினார். விற்பனையாகாத வீடுகளில் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் சென்னை சைதாப்பேட்டையில் 1800 வாடகை குடியிருப்புகள் விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை.! ஒப்புதல் அளிக்காத ஆளுநர்.! தமிழக அரசு 162வது பிரிவை பயன்படுத்த வேண்டும்-அன்புமணி

click me!