சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் உள் விளையாட்டு அரங்கை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நிலையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் அவரது காலில் விழுந்த சம்பவம் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்விளையாட்டு அரங்கை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து கபடி போட்டியையும் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சி நிறைவு பெறும் தருவாயில் வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பாமஎ எம்.எல்.ஏ. காலில் விழுவதை கண்டுகொள்ளாத பழனிசாமி பிற தொண்டர்களை கவனிக்கத் தொடங்கினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரின் காலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் விழுவதை கண்ட பாமக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முன்னதாக சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன் பட்டியில் அமைந்திருந்த டாஜ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.