ஒற்றுமையில் வேற்றுமை காண்பவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் டெப்பாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு.
மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்:
இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறொஸ்தவர்கள், புத்தர்கள் உள்பட 20% சிறுபான்மையின மக்கள் வாழ்கின்றனர். சமய வேறுபாடுகள் இந்தியாவில் தலைவிரித்து ஆடுவது போல் நிகழ் காலத்தில் வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. சைவம் வைணவம் என பேசி அரிசியல் ஆக்கி அதில் குளிர்காய கூடிய சூழல் அபத்தமானது ஆப்பத்தானது. அதை சிலர் செய்து வருகின்றனர்.
undefined
அரசு பள்ளிகளை மேம்படுத்த நடிகர்கள் உதவ வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. சிந்து சமவெளி ஊடுருவி ரிக்,சமா ஆகிய 4 வேதங்கள் வழியாக சாதி, மதம் ஏற்றத் தாழ்வு சமூகமாக மாறியது. அனைத்து தெய்வங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள், புதிதாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். தற்போது வெறுப்பை கக்கும் செயல் இந்த நாட்டில் நடைபெறுகிறது என்றார்.
செஞ்சி மஸ்தான்
இதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ஆரிய கூட்டம் சிறுபான்மையினரின் கல்விக்குத் தடைவிதிக்க சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கான நிதி உதவியை நிறுத்தி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட போது போராட்டம் வழியாக மீண்டும் பெறப்பட்டது.
சிறுபான்மையின மாணவர்களுக்கான நிதி உதவியை மீண்டும் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். சிறுபான்மையின மாணவிகள் கல்வியை அதிகரிக்க மூன்றாம் வகுப்பு முதல் 6 வகுப்பு வரை பயிலும மாணவிகளுக்கு 500 ரூபாய் உதவித் தொகையும், அதற்கு மேல் படிப்பவர்களுக்கு 1000 ரூபாய்யும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசின் செயல்பாடுகள் குறிப்பிட்ட கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் இருப்பவர் ஏற்படுத்தும் பாதகத்தை சாதகமாக்குவது நமது கடமை என முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்வார் அதை போல் நாம் செயல்பட வேண்டும். மத்திய பாஜக அரசு மக்கள் விரோத அரசாக இருந்து கொண்டு மக்களின் பாதுகாவலர்கள் போல ஓர் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கடன் 56 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 133 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது இதுதான் உங்கள் நிர்வாகத் திறனா? தனி நபர் மீதான கடன் 44 ஆயிரத்தில் இருந்து 1.43 லட்சமாக மாறி இருக்கிறது. கேட்பதையும் கேட்காததையும் கொடுக்கும் ஆட்சிதான் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, யாருக்கும் அஞ்சாமல், அலட்சியம் காட்டாமல் சிறுபான்மையினர் நலன் சார்ந்து இயங்கும் ஆட்சி நமது ஆட்சி.
ஒற்றுமையில் வேற்றுமை காணும் அந்த கூட்டத்திற்கு நாம் செவி சாய்க்காமல், இடமளிக்காமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மை பிளவுபடுத்த நினைப்பவர்களை தேர்தலில் போட்டியிடும் அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்றார்.