தக்காளி எவ்வளவு விலைக்கு விற்றால் என்ன? நாங்கள் தான் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோமே; அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

By Velmurugan s  |  First Published Jul 26, 2023, 5:35 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப முகாமில் தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று கூறிய பெண்ணிடம் நாங்கள் தான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே என அமைச்சர் பொன்முடி பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று  நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கும் முகாம்களை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லூர் பேரூராட்சில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்ட  அமைச்சர் பொன்முடி அங்கு இருந்த பொதுமக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைச் திட்டத்தில் எவ்வளவு பணம் அரசு வழங்க உள்ளது தெரியுமா? 

Latest Videos

undefined

உங்களுக்கெல்லாம் வீடு, கார் இதுபோன்று ஏதேனும் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்பின்னர் இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை யார் தருகிறார்கள் என தெரியுமா என கேட்டார். அப்போது  கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர் தக்காளியின் விலை 100 ரூபாயாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் என கூறினார்.  

இளைஞர் படுகொலையில் ரூ.3 லட்சம் கொடுத்து வழக்கை சரிகட்ட நினைத்த காவல்துறை? பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு

அதற்கு அமைச்சர் பொன்முடி மோடியிடம் போய் கேளுங்கள். விலைவாசி ஏறும், இறங்கும் நாங்கள் தான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே அது மகிழ்ச்சியா இல்லையா? என கேள்வி கேட்ட பெண்னை பார்த்து கூறிவிட்டு நாங்கள் தான் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் தக்காளி கொடுக்க நடவடிக்கை எடுத்தோமே என தெரிவித்தார். அதன் பின்னர் அந்த பெண் தனக்கு ஓட்டு போடவில்லை என்றும்  யாராவது சொல்லிக் கொடுத்து பேசுவார் என கூறிவிட்டு அமைச்சர் பொன்முடி சென்றார்.

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மருத்துவரின் கையொப்பத்துடன் விற்கப்பட்ட கடன் விண்ணப்பத்தால் பரபரப்பு

click me!