திமிர் பேச்சு.! பிடிஆருக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்!

By Raghupati RFirst Published Aug 21, 2022, 9:07 PM IST
Highlights

தான் வெளிநாட்டில் படித்தவர், மத்திய அரசு அறிவுரை கூற என்ன நோபல் பரிசா வாங்கினார்கள் என அவர் கேட்கிறார்.

மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் அதிக அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், அமைப்புசாரா தொழிலாளர் நல அட்டை வைத்திருப்பவர்கள் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!

உடல்ரீதியாக பாதிப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்றாலும், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை பல்வேறு இடங்களில் இதற்காக முகாம்களை நடத்த வேண்டும். இதன்மூலம் ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

சட்டப்பேரவையில் இ-ஷ்ரம் அட்டை குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் கேட்டபோது, குறைவான எண்ணிக்கையை கூறினார். ஆனால், கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை இந்த திட்டத்தில் இணைக்க முடியும். தமிழக அரசிடம் இருப்பதோ லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தகவல்கள் மட்டுமே. இது, மத்திய அரசின் திட்டம் என்று பார்க்காமல் ஏழை எளிய மக்களுக்கு உதவிட தமிழக அரசு முன்வர வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !

தான் வெளிநாட்டில் படித்தவர், மத்திய அரசு அறிவுரை கூற என்ன நோபல் பரிசா வாங்கினார்கள் என அவர் கேட்கிறார். வெளிநாட்டில் படிச்சனு சொல்றாங்க, ஆனா அதுக்கான தகுதி கொஞ்சம் கூட இல்லை’ என்று  நிதியமைச்சர் பிடிஆருக்கு எதிராக கடுமையாக பேசினார் வானதி சீனிவாசன்.

மேலும் செய்திகளுக்கு..ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி

click me!