காங்கிரஸ் கூட்டத்தில் பரபரப்பு.. தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்.. பாதியிலேயே கிளம்பிய நாராயணசாமி

By Thanalakshmi VFirst Published Aug 21, 2022, 4:46 PM IST
Highlights

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன், எம்.பி வைத்திலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ஒரு பிரிவாக உள்ளனர். அது போல், முன்னாள் அமைச்சர்களான கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் மற்றொரு பிரிவாக உள்ளனர்.

மேலும் படிக்க:அதிமுக அழிவு பாதைக்கு செல்வதற்கு எட்டப்பன் கே.பி முனுசாமி தான் காரணம்...! அதிமுக நிர்வாகி ஆவேச கருத்து

இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் சிலர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், அவரை மாற்ற வேண்டும் என்றும் கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே நாராயணசாமி வெளியேறினார்.

மேலும் படிக்க:

இதனைதொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராகவும் மாநில தலைவரை மாற்றக்கோரியும் கோஷங்களை எழுப்பி முற்றுக்கை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் மாநில தலைவர் சுப்ரமணியன் காரில்,  ஏறி புறப்பட முயன்ற குண்டுராவை கட்சியினர் போக விடாமல் தடுத்து, கார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
  

click me!