சாதியை ஒழிக்கும் போராட்டம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலமும் மய்யமும் ஒன்றுதான் என்று பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இயக்குநர் பா. இரஞ்சித் நீலம் புக்ஸ் புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வருகை தந்தார்.
அப்போது பேசிய அவர், அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியே வைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேசுவது தான் அரசியல். தனது முதல் அரசியல் எதிரி சாதி என்று கூறினார்.
undefined
இதையும் படிங்க..Palani : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் !!
தொடர்ந்து பேசிய அவர், இதை தான் 21 வயதிலேயே சொல்லிவிட்டடேன். அரசியலில் இருந்து சாதியை ஒழிக்கும் போராட்டம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலமும் மய்யமும் ஒன்றுதான். அரசியல்வாதியாகிய பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் உருவாக்கியது தான் அரசியல். மக்களுக்கானது தான் அரசியல். அதனை தலைகீழாக திருப்பிப்போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைக்கிறேன். தலைவர்களை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்களில் பலர் கீழே குடிமகன்களாக அமர்ந்திருக்கிறார்கள்.
கொடூரமான ஆயுதம் சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என எனக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்பேத்கரிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் நடந்தபாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் நீட்சியாகத் தான் நீலம் பண்பாட்டு மையத்தையும் பார்க்கிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்
இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!