ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், நாடாளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட்டை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தபோது இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்டாகவும், செல்வந்தர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.
இதையும் படிங்க: யார் இந்த சி.பி ராதாகிருஷ்ணன்..? ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது ஏன்.?
பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன. மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்றன. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக அரசை அகற்ற வேண்டும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: இந்தியாவை கொள்ளையடிக்க அதானிக்கு ஆதரவாக செயல்படும் மோடி..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய ஜோதிமணி
ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது. தற்போது சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒன்றும் புதியது அல்ல. முன்னதாக எல். கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் ஆளுநர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். பாஜக நியமிக்கும் ஆளிநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.