யார் இந்த சி.பி ராதாகிருஷ்ணன்..? ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது ஏன்.?

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஆர் என அன்போடு அழைக்கப்படும் சிபி ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் ஆற்றிய பணிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.


ஆளுநராகிறார் சிபி ராதாகிருஷ்ணன்

பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சிபி ராதாகிருஷ்ணன், இவரை ஜார்கண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.  1957-ம் ஆண்டு மே 4-ம் தேதி பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தனது 14-வது வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வுடன் தொடர்புடையவர், 1990 முதல் 1995 வரை, 2001 முதல் 2006 வரை என இரண்டு முறை தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்திருக்கிறார். சி.பி. ராதாகிருஷ்ணன். 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். 1998 இல் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 பொதுத் தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

Latest Videos

இரண்டு முறை எம்பி ஆன சிபிஆர்

2014 பொதுத் தேர்தலில், கோவை மக்களவைத் தொகுதியில் திமுக அல்லது அதிமுக ஆதரவின்றி சிபி ராதாகிருஷ்ணன் 3,89,000 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.  2019 மக்களவைத் தேர்தலில் 3,92,007 வாக்குகளைப் பெற்று மீண்டும் கோவை மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1998, 1999, 2004, 2014, 2019 என ஐந்து முறை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதில் 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று மூன்று முறை தோல்வியை தழுவியுள்ளார். 2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்துள்ளார்.

நட்போடு பழகும் சிபிஆர்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்யில் தீவிரமாக செயல்பட்டாலும் அரசியல் ரீதியாக மாறுபட்ட கொள்கைகளை கொண்டிருந்தாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பிற கட்சி தலைவர்கள் உடன் நட்புறவுடன் பழகிவருகிறார். மேலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதால் சிபி ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் வகையில் தற்போது ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

இந்தியாவை கொள்ளையடிக்க அதானிக்கு ஆதரவாக செயல்படும் மோடி..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய ஜோதிமணி

click me!