இந்தியாவை கொள்ளையடிக்க அதானிக்கு ஆதரவாக செயல்படும் மோடி..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய ஜோதிமணி

Published : Feb 12, 2023, 11:56 AM IST
இந்தியாவை கொள்ளையடிக்க அதானிக்கு ஆதரவாக செயல்படும் மோடி..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய ஜோதிமணி

சுருக்கம்

மோடியின் வெளிநாட்டின் பயணத்தின் போது அதானி ஏன் செல்கின்றார் ? உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் அதானி பெயர் வந்தது எப்படி ?  என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.  

பேனா சிலை அவசியம்

அகில இந்திய அளவிலான தேசிய கூடைப்பந்தாட்ட போட்டி கரூரில் நடைபெற்று வருகின்றது.  இந்த போட்டியினை துவக்கி வைத்த  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதி நினைவாக பேனா நினைவுச்சின்னம் கண்டிப்பாக வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், பேனா நினைவுச் சின்னத்தினை அரசியலாக்காதீர்கள். ஏனென்றால் பேனா பல்வேறு புரட்சிகளையும், புதுமைகளையும் படைத்ததாக தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர் ஆகையால், அவருடைய பேனா நினைவுச்சின்னம் கண்டிப்பாக வைக்க வேண்டு மென கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் மூடப்பட்ட பள்ளிவாசல்..! உள்நோக்கத்தோடு அடைக்கப்பட்டுள்ளதா.? சந்தேகத்தை எழுப்பும் ஜவாஹிருல்லா

அதானி உலக கோடீஸ்வரர் ஆனது எப்படி.?

காங்கிரஸ் ஆட்சியில் உலகின் பணக்காரர் பட்டியலில் 609 வது இடத்தில் இருந்த அதானி, நரேந்திர மோடி ஆட்சியில் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனதாக விமர்சித்தார். விதிகளுக்கு புறம்பாக அதானிக்கு டெண்டர் கொடுப்பது ஏன் ? என கேள்வி எழுப்பியவர், உலகின் பல்வேறு இடங்களுக்கு மோடி செல்லும் போது அதானியையும் அழைத்து சென்று டெண்டர் வலுக்கட்டாயமாக கொடுப்பதாகவும் விமர்சித்தார். அதானி என்கின்ற தனிநபர் மூலம், பாஜக கட்சியும், நரேந்திர மோடி அரசும், இந்தியாவினை கொள்ளையடிப்பதற்கு அவருக்கு ஆதரவாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்ணாமலை..! பிரச்சாரத்திற்கு தேதி அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!