ஜார்கண்ட் ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன்.. நாகலாந்து ஆளுநராக இல.கணேசன் நியமனம்

பாஜகவை மூத்த நிர்வாகியான சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவு மத்திய அரசு வெளியிட்டுள்ளது


ஆளுநராகிறார் சிபி ராதாகிருஷ்ணன்

புதிதாக ஆளுநரை நியமித்தும் ஆளுநர்களை மாற்றம் செய்தும் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்ணாமலை..! பிரச்சாரத்திற்கு தேதி அறிவிப்பு

பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன்

இந்தநிலையில் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அத்துடன் இவர் 2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணனை மத்திய அரசு நியமித்து உத்தரவு வெளியிட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநராகும் பாஜக தலைவர்கள்

ஏற்கனவே தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களாக இருந்த இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் ஆளுநராக பொற்றுப்பேற்ற நிலையில், தற்போது மற்றொரு பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். நாகலாந்து ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக வேட்பாளரை அறிவிக்க கூட அண்ணாமலையின் அனுமதிக்காக காத்திருந்த இபிஎஸ்.! பாஜகவின் கொத்தடிமை -சிபிஎம்

click me!