ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்ணாமலை..! பிரச்சாரத்திற்கு தேதி அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Feb 12, 2023, 8:14 AM IST

ஈரோடு இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாள் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
 


ஈரோடு இடைத்தேர்தல்

யஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பார் திடீர் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிட உள்ளார். மேலும் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளனர்.

Latest Videos

அதிமுக வேட்பாளரை அறிவிக்க கூட அண்ணாமலையின் அனுமதிக்காக காத்திருந்த இபிஎஸ்.! பாஜகவின் கொத்தடிமை -சிபிஎம்

திமுக-அதிமுக தீவிரம்

21 மாத திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்களின் வாக்களிப்பாக இருக்கும் என்பதற்காக திமுக அமைச்சர்கள் ஈரோடு தொகுதியில் குவிந்துள்ளனர். அதே நேரத்தில் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈரோடு தொகுதியில் இரண்டு நாள் பிரச்சாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஐந்து நாட்கள் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

களத்தில் இறங்கிய அண்ணாமலை

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக இலங்கைக்கு சென்றுள்ள அண்ணாமலை கர்நாடக மாநில தேர்தல் பணிகளையும் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் வருகிற 19 மற்றும் 20ஆம் தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆளுநர் மாளிகையில் மூடப்பட்ட பள்ளிவாசல்..! உள்நோக்கத்தோடு அடைக்கப்பட்டுள்ளதா.? சந்தேகத்தை எழுப்பும் ஜவாஹிருல்லா

click me!