தமிழகத்தில் இந்த 6 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எழுத்தால் ஊழல் ஒழியும் - அண்ணாமலை கருத்து

By Velmurugan sFirst Published Jul 27, 2023, 4:08 PM IST
Highlights

தமிழகத்தில் இந்த 6 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே ஊழல் ஒழிந்துவிடும் என்று பாஜக மாநிலத்தலைர் அண்ணாமலை மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நாளை நடைபெற உள்ள பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை ராமேஸ்வரத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை தொடங்க உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். 234 தொகுதிகள் செல்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி மாதத்தில் யாத்திரையை முடிக்க உள்ளோம். 

நெய்வேலியில், நெல் அறுவடை செய்யக்கூடிய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டு நிலத்தை கையகப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்.எல்.சிக்கு நிலங்களை கையகப்படுத்திக் கொடுப்பது மாநில அரசு தான். பயிர் விளைந்திருக்கும் நிலத்தில் இயந்திரத்தை விட்டு நிலத்தை எடுப்பது என் எல் சி மேனேஜிங் டைரக்டரிடம் என் கண்டனத்தை பதிவு செய்தேன்.

பெரும்பான்மையினரின் வாக்குக்காக சிறுபான்மையினரின் கல்வியில் கை வைக்கும் மத்திய அரசு - பீட்டர் அல்போன்ஸ் ஆதங்கம்

திமுகவின் இரண்டாவது சொத்து பட்டியல் பெட்டியின் மூலமாக ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட பினாமிகள் யார் பெயரில் இடங்கள் உள்ளது, யார் பணத்தை சேகரிக்கிறார்கள், சேகரிக்கும் உறுப்பினர் யார்? விரைவில் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு வேண்டும் என்பதாலேயே இந்த கோப்புகள் நேரடியாக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆறு அமைச்சர்களின் பெயர்களை சொல்வதைவிட பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் தமிழ்நாடு லஞ்சம் லாவண்யம் இல்லாத மாநிலமாக மாறும். முதலமைச்சர் ஒரு அமைச்சரின் வைப்பு நிதியில் 41 கோடி ரூபாய் எப்படி இருக்கும் என்பது குறித்து பேச வேண்டும். முதலமைச்சரின் நாற்காலிக்கு இது போன்ற வார்த்தைகள் அழகு கிடையாது. நாங்களும் எதற்கும் தயாராக தான் இருக்கிறோம்.

அடுக்கடுக்காக கேள்வி கேட்ட அமைச்சர் பொன்முடியை ஒரே பதிலில் வாயடைக்க வைத்த மூதாட்டி

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் சென்று கிரவுண்ட் ரிப்போர்ட் கொடுக்க உள்ளார்கள். இந்தியாவில் மிகவும் காம்ப்ளக்ஸ் ஆக இருக்கக்கூடிய மாநிலம் மணிப்பூர். ஏகப்பட்ட பிரிவினர்கள் அடிக்கடி சண்டையிடுவார்கள். அரசாங்கத்திடம் லஞ்சம் வாங்கி தான் ராணுவத்திற்கு ரோடு போடவே அனுமதித்தார்கள். மத்திய அரசே இந்த விவகாரத்தை சரி செய்யும். பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தில் நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று மத்திய இணை அமைச்சர் பேசுவதற்கு தயாராக உள்ளார். எதிர்க்கட்சி நண்பர்கள் அரசியல் செய்யும் காரணத்திற்காக அரசியல் செய்வது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

click me!