அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக வயதான யானை. எங்கள ஒன்னும் பன்ன முடியாது. முதல்வர் ஸ்டாலின் எழுதி கொடுத்ததை தான் படிப்பாரே தவிர அவராக எதுவும் சொல்லத் தெரியாது. குறிப்பில்லாமல் நான் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
திமுக வயதான யானை என்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் விமர்சனத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக வயதான யானை. எங்கள ஒன்னும் பன்ன முடியாது. முதல்வர் ஸ்டாலின் எழுதி கொடுத்ததை தான் படிப்பாரே தவிர அவராக எதுவும் சொல்லத் தெரியாது. குறிப்பில்லாமல் நான் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். அதுபோன்று முதலமைச்சரால் பேச முடியுமா? கேள்வி எழுப்பியிருந்தார். செல்லூர் ராஜூவின் விமர்சனத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
undefined
இது தொடர்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- திமுக மக்கள் மனம் விரும்பும் பட்டத்து யானை. அது மாட்சிமை மிக்க ஓர் ஆட்சிக்கான அடையாளம் மட்டுமல்ல; எண்ணிறந்த போர்க்களங்களைக் கண்டு, எதிர்ப்படும் எதிரிகளைப் பந்தாடி வெற்றி வாகை சூடி வரும் போர்யானையும் கூட! சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப் பற்று ஆகிய நான்கு பலமிக்க கால்களினாலும், மக்கள் நலனுக்கென்றே இயங்கும் உறுதி மிக்க துதிக்கையினாலும், நிமிர்ந்து நிலை பெற்று நிற்கும் இந்த யானை, ஆதரவற்றவர்களை அரவணைக்கவும் செய்யும்.
ஆணவப்போக்கினால் சீண்டியோரைத் தூக்கி வீசவும் செய்யும். இது ஊரறிந்த உண்மை என்றாலும், யானை என்னும் பேருரியின் ஆற்றலைக் குறித்து சில நோய்ந்த மாடுகள் இன்றைக்கு விசனப்படுவதுதான் விசித்திரமாக இருக்கின்றது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.