அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கிவைப்பதற்காக நாளை தமிழகம் வரும் அமித்ஷா, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இல்லம் மற்றும் விவேகானந்தர் மணிமண்டபத்திற்கும் செல்லவுள்ளார்
அண்ணாமலை பாதை யாத்திரையில் அமித்ஷா
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ள பாத யாத்திரையை சென்னையில் ஜனவரி 11 ஆம் தேதி முடிக்கவுள்ளார். இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிரச்சார வாகனம் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளது. அண்ணாமலையின் நடை பயணத்தை பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக இரண்டு நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார்.
undefined
ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் அமித்ஷா
நாளை மதியம் 1 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் புறப்படும் அமித்ஷா மாலை 4 மணிக்கு மதுரை வந்தடைகிறார். இதனை தொடர்ந்து மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் அமித்ஷா விடுதியில் ஓய்வு எடுக்கிறார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் மாலை 5.45 மணிக்கு அண்ணாமலையில் நடை பயண நிகழ்வில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். இதனையடுத்து இரவு 8.30 மணிக்கு பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இரவு நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கவுள்ளார்.
அப்துல் கலாம் நினைவிடம் செல்லும் அமித்ஷா
இதனை தொடர்ந்து அடுத்த நாள் அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். இதனைதொடர்ந்து காலை 10.30மணிக்கு கர்கர்டா என்பவரின் வீட்டிற்கு அமித்ஷா செல்லவுள்ளார். தொடர்ந்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அப்துல் கலாம் வீட்டிற்கும் செல்வுள்ளார். இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு பாம்பன் பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கும் செல்கிறார். விவேகானந்தர் இல்லத்தை பார்த்து விட்டு மண்டபம் செல்லும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை பாதயாத்திரைக்கு தயாராகியுள்ள சொகுசு பேருந்து..! என்னென்ன வசதிகள் உள்ளது என தெரியுமா.?