Monsoon Heath Care Tips : மழைக்காலம் வரப்போகுது.. ஆரோக்கியமாக இருக்க இதெல்லாம் நோட் பண்ணி வச்சுக்கோங்க.!

By Kalai Selvi  |  First Published Jul 23, 2024, 11:03 AM IST

Monsoon Healthy Tips In Tamil : மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.


மழைக்காலம் பலருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பருவத்தில் பல நோய்களும் நம்மை தாக்குகின்றது. மழைக்காலம் நெருங்க நெருங்க செரிமான பிரச்சனைகள், தோல் பிரச்சனை, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், உணவு மற்றும் வாழ்க்கை முறை என இரண்டிலும் நாம் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இதற்கு நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்தால் மட்டும் போதும், நோய் எதிர்ப்பு சக்தியை சுலபமாக அதிகரிக்கச் செய்யலாம். அந்த வகையில் மழைக்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை:

Latest Videos

undefined

1. சூடான நீர் குடியுங்கள்:
மழைக்காலத்தில் சூடான நீர் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில், தண்ணீர் உள்ள பாக்டீரியாக்கள் இதனால் அழிக்கப்படுகிறது. எனவே, தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான நீர் குடியுங்கள். மழைக்காலம் முடியும் வரை சூடான நீரை எப்போதும் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

2. பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவி சாப்பிடுங்கள்:
நீங்கள் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வீட்டிற்கு வாங்கிட்டு வந்த உடன் அவற்றை கண்டிப்பாக கழுவி வைக்கவும். ஏனெனில், மழைக்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பூச்சிகள் தங்கும். அதுபோல, பழங்களை சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக கழுவி சாப்பிடுங்கள்.

3. ஈரத்துடன் இருக்காதீர்கள்:
நீங்கள் மழையில் நனைந்தால் உடனே உங்கள் ஆடைகளை மாற்றி விடுங்கள். ஏனெனில், அதிக நேரம் ஈரத்துடன் இருந்தால் உங்களுக்கு தலைவலி, சளி அல்லது காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை கண்டிப்பா  கொடுங்க.. நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

4. துளசி கசாயம் குடியுங்கள்:
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க துளசியில் கசாயம் செய்து குடியுங்கள் இதற்கு துளசி, அதிமதுரம் மற்றும் இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பிறகு அதை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து குடியுங்கள். இந்த பொருட்கள் அனைத்தும் தொற்று மற்றும் நோய்களின் அபாயத்தை பெரிதும் குறைக்க. அதுமட்டுமின்றி, இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்ய உதவுகிறது. இந்த கசாயத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் குடிக்கலாம்.

5. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்:
மழைக்காலத்தில் வெளியில் சாப்பிட்டால் நீங்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. தெருவுணவுகள் திறந்தவெளியில் இருப்பதால், அதில் பாக்டீரியாக்கள் வளரும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: மழைக்காலத்தில் உங்க முகம் ஜொலிக்க 'இந்த' ஸ்கின் கேர் டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!

இந்த விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

  • மழைக்காலத்தில் நீங்கள் இருக்கமான ஆடைகளை அணிந்தால், அது உங்களுக்கு நோய் தொற்றுக்கான வாய்ப்பு ஏற்படுத்தும். எனவே, இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.
  • அதுபோல, நீங்கள் சிறுநீர் கழித்த பிறகு கண்டிப்பாக உங்களது அந்தரங்க உறுப்பை டிஷ்யூ கொண்டு சுத்தம் செய்யுங்கள். ஏனெனில், அந்தரங்க உறுப்பு நனைந்து இருந்தால், அதில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகமாகவே உள்ளது.
  • வருத்தம் மற்றும் காரமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 
  • முக்கியமாக நீங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!