தினமும் காலை இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. ஆரோக்கியமாக இருப்பீங்க..!

By Kalai Selvi  |  First Published Jul 23, 2024, 8:00 AM IST

Healthy Breakfast in Tamil : நாம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது மிகவும் அவசியம். எனவே காலை உணவில் நீங்கள் என்னெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.


காலை உணவாக எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? என்று பலருக்கும் குழப்பமாகவே இருக்கும். சிலர் காலையில் எழுந்தவுடன் நட்ஸ் சாப்பிட விரும்புவார்கள். இன்னும் சிலரோ பழங்கள் அல்லது ஒரு கப் டீ அல்லது காபி  தங்கள் நாளை தொடங்குவார்கள். ஆனால், காலையில் எந்தெந்த பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று உங்களுக்கு தெரியுமா?

நாளின் ஆரம்பத்திற்கு காலை உணவு மிகவும் முக்கியம். ஆனால், பலர் தங்களது காலை உணவை தவிர்க்கிறார்கள். சிலர் நிச்சயமாக காலையில் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீங்கள் காலை உணவை ரசிப்பவராக இருந்தால் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை தரக்கூடிய மற்றும் நீண்ட நேரம் நிறைவாக உணரக்கூடிய உணவை சாப்பிட வேண்டும். எனவே, காலையில் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதே உங்களுக்கு குழப்பமாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய சில உணவுகளைப் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவை..

Tap to resize

Latest Videos

காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

1. முட்டை:
முட்டை காலையில் சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவாகும். இது புரதத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது மேலும் இது ஜீரணிக்க நீண்ட நேரம் ஆகும். எனவே, நீங்கள் முட்டை சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். முட்டை உங்கள் மூளை மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

2. பப்பாளி:
காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், பப்பாளி உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தும். அதுமட்டுமின்றி, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். ஆனால், இதை சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு வேறு எதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. ஓட்ஸ்:
ஓட்ஸ் ஒரு நல்ல காலை உணவாகும். ஓட்ஸில் ஒரு தனித்துவமான நார்ச்சத்து உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும. இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. ஓட்ஸ் இரும்பு, வைட்டமின் பி, மெக்னீசியம் துத்தநாகம் போன்றவற்றின் நல்ல மூலமாகும்.

4. கிரீன் டீ:
காலையில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், கிரீன் டீயில் உள்ள காபின் உங்களை புத்துணர்ச்சியாக்கும், உங்களது மனநிலையை நன்றாக வைத்திருக்கும் மற்றும் பதட்டத்தை குறைக்கும்.

5. சியா விதைகள்:
சியா விதைகள் மிகவும் சத்தானவை மற்றும் நார்ச்சத்துகளுக்கான சிறந்த மூலமாக கருதப்படுகிறது. இது  உங்களுக்கு பசியை ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி, இது சர்க்கரை அளவை சீராக வைக்க பெரிதும் உதவுகிறது.

click me!