கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

By Asianet Tamil  |  First Published Jul 22, 2024, 8:30 PM IST

Relationship Tips in Tamil : ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு, அவர்களுக்கு இடையே சரியான வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.


திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தமாகும். ஆனால், மாறிவரும் சமூகத்தின் மாற்றத்தால் திருமணம் தொடர்பான மரபுகளும் மாறிவிட்டது. முந்தைய காலத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணம் வழக்கத்தில் இருந்தது. ஆனால், தற்போது இளம் தலைமுறையினர் மத்தியில் காதல் திருமணம் அதிகரித்து வருகின்றது. 

'காதலுக்கு கண் இல்லை' என்று சொல்லப்படுகின்றது. அது உண்மை தான். ஏனெனில், அது யாருக்கு யார் மேல் வேண்டுமானாலும் வரும். முக்கியமாக, இது வயது வித்தியாசமின்றி வரும். உதாரணமாக, கிரிக்கெட் வீரர் சச்சின் தன்னை விட வயது மூத்த அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட குறைந்த நபரை திருமணம் செய்து கொண்டார். 

Tap to resize

Latest Videos

undefined

கணவன் மனைவி இடையே வித்தியாசம் இருக்க வேண்டும். அதுபோல, பெண்ணின் வயதை விட ஆணின் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இருவருக்கும் இடையில் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆகவே, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பற்றி அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

இதையும் படிங்க:  புதிதாக திருமணமான பெண்களே.. திருமண வாழ்க்கை ஹாப்பியா இருக்க.. கண்டிப்பா இந்த 4 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க

ஆணுக்கு பெண்ணுக்கும் வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும்?
பொதுவாகவே, கணவன் மனைவி இடையே 5 முதல் 7 வரை வயது இடைவெளி இருக்க வேண்டும். இதுகுறித்தும், பல ஆய்வுகள் உள்ளது. இப்படி வயது வித்தியாசம் இருக்கும் பெண்கள் ஆண்கள் சிந்தையில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. மேலும், இருவருக்கும் இடையே அதிக அக்கறை இருக்கும். மேலும், ஒருவரையொருவர் எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இதையும் படிங்க: உங்க கணவரை சந்தோஷப்படுத்த எந்த பரிசும் தேவையில்லை.. இந்த 6 விஷயங்களை மட்டும் செஞ்சா போதும்..

எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க கூடாது?
கணவன் மனைவிக்கு இடையே ஒரு வயது வித்தியாசம் இருந்தால் அது அவர்களுக்கு இடையே விவாகரத்து ஏற்படும் வாய்ப்பு 3% உள்ளது என்று ஆய்வு சொல்லுகிறது. அதுபோல், 10 வயது வித்தியாசத்தில் இருக்கும் தம்பதிகளுக்கு இடையே 39 சதவீதமும், 20 வயது வித்தியாசத்தில் இருக்கும் தம்பதிகளுக்கு இடையே 95% விவாகரத்துக்கான வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே தூரம் வயது வித்தியாசம் குறைவாக இருந்தால் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இது இருவருக்கும் இடையே சமமான நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். மேலும், அவர்களுக்கு இடையே விவாகரத்துக்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!