பாலியல் உணர்வை தூண்டும் "பொட்டு"..! எந்த இடத்தில் எப்போது வைக்கக்கூடாது என்பதையும் தெரிஞ்சிக்கோங்க...!

By ezhil mozhiFirst Published Mar 8, 2019, 8:16 PM IST
Highlights

நம் முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியல் பூர்வமான முறைகளை வகுத்துள்ளனர். 

நம் முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியல் பூர்வமான முறைகளை வகுத்துள்ளனர். பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம் என்று கூட தெரியாமல் செய்து வருகிறோம். அதில் சில சடங்கு முறைகளை தவறாக கூட செய்கிறோம் ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம்.அதாவது இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் போட்டு வைப்போம். இது எல்லோரும் கடைபிடிக்கும் சம்பிரதாய முறை ஆனால் திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அதுதான் வகுடு.

இந்த இடத்தில் தினமும் பெண்கள் தொட்டு பொட்டு வைப்பதால் அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரப்பிகள் தூண்டப்படுகிறது பெண்களுக்கு நெற்றி வகுடில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு அடிவயிற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதேபோல் கர்ப்பப்பையும் வலுப்பெறுகிறது. திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வம் ஏற்படவும்,கருப்பை வலுப்பெற வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். 

மேலும் சீமந்தம் 5 அல்லது 7 ஆவது மாதம் வளைகாப்பு செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றியில் பொட்டு வைத்து தொட்டு ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. வலுப்பெற்றால் குறைப்பிரசவம் உண்டாகாது. நிறைமாதமாக இருக்கும்போது சுகப்பிரசவம் ஏற்படும். ஆனால் கணவனை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டப்படாமல் இருப்பதற்காக கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடில் உள்ள பொட்டை வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றனர்.

ஆனால் பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல் பொட்டு வைக்கக்கூடாது என்று மாற்றி விட்டனர். ஆனால் இரு புருவ மத்தியில் உள்ள பொட்டு ஆண் பெண் எல்லோரும் வைக்கலாம். 

click me!