நிர்வாணமாக ஊர் சுற்றும் பிரிட்டன் மக்கள்..எதற்கு தெரியுமா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

By Raghupati RFirst Published Nov 1, 2022, 5:41 PM IST
Highlights

கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்ட Ipsos என்ற கணக்கெடுப்பில் 14 சதவீத பிரிட்டனை சேர்ந்தவர்கள் தங்களை நிர்வாணவாதிகள் என்று விவரித்துள்ளனர். ஏன் தெரியுமா ? அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதாவது 6.75 மில்லியன் மக்கள் கொண்ட பிரிட்டனில் தோராயமாக ஏழில் ஒருவர்,  நீச்சல், கடற்கரையில் குளியல் அல்லது விளையாட்டுகள் விளையாடும்போது நிர்வாணமாக இருக்க விரும்புகிறார்கள்.

பொதுவாக பிரிட்டனில் நிர்வாண நிலையில் யோகா செய்யும் இடங்கள்,நூலகம், பைக் சவாரிகள் மற்றும் இரவு நேர உணவு விடுதி மற்றும் டிஸ்கோக்கள் போன்றவற்றில் அவர்கள் இருப்பதை காணலாம். சமூக வலைத்தளங்களிலும் காணலாம்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய நிர்வாண ரிசார்ட், கென்ட்டில் உள்ள நேச்சரிஸ்ட் ஆகும். பிரிட்டிஷ் நேச்சுரிஸத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர நியூடெஃபெஸ்ட் வார இறுதியில், சுமார் 700 பேரை ஈர்த்தது. இதுபற்றி பேசிய நேக்கட் லிங்கன்ஷையரின் நிறுவனர் கிறிஸ் பெட்சே, இது ஒரு முழுமையான விடுதலை. உங்கள் ஆடைகளை களைவதன் மூலம், உங்களுக்கும் உலகத்திற்கும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள பிரிவினை என்ற அடுக்கை நீக்குகிறீர்கள்.

இதையும் படிங்க..நவம்பர் 1 - மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று.!!

நீங்கள் முற்றிலும் நிம்மதியாக இருக்க அனுமதிக்கிறீர்கள். நீங்கள் நிர்வாணமாக இருக்கும்போது, ​​உங்களைப் பற்றி யாரும் முன்முடிவுகளை உருவாக்க முடியாது என்று கூறினார். நிர்வாணத்தை கடைப்பிடிக்கும் நபர்களுக்கு மிகவும் பொதுவான காரணம், உண்மையில், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருப்பதுதான் என்றும் அங்குள்ளோர் சிலர் கூறுகிறார்கள். 1920 களில் இது முதன்முதலில் இங்கிலாந்தில் இது தோன்றியது.

போர்,தொற்றுநோய் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க மக்கள் இதுபோன்றவற்றில் ஈடுபட தொடங்கினர் என்றும் கூறுகிறார்கள். Nudism என்ற நூலின் ஆசிரியரான பேராசிரியர் Annebella Pollen, ‘சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்று ஆகியவை உண்மையான குணப்படுத்தும் கருவிகளாகக் கருதப்பட்டன. எனவே ஒருவரின் முழு உடலையும் வெளிப்படுத்துவது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான லியை நோக்கி நகரும் ஒரு சிறந்த வழியாகும். அதற்கு நிர்வாணமாக இருப்பதே சிறந்தது என்று அதில் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?

இதையும் படிங்க..தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை.. மக்களே உஷார் !!

click me!