
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி, ஓடுதல், ஜாக்கிங் போன்ற எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள் . அதிலும் தினமும் நடைப்பயிற்சி செய்தால் இரத்த ஓட்டம் மேம்படும், இதயம் பலப்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடல் எடை, இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். இது தவிர மன அழுத்தம் குறையும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க உதவும்.
இருப்பினும் குளிர் காலத்தில் நடைபயிற்சி செய்வது சில சவால்களை ஏற்படுத்தக்கூடும். அதாவது வானிலையின் வெப்பம் குறையும்போது உடலின் வெப்பநிலையும் குறையும். இதனால் தசைகள் விறைப்பாகும். இந்த சமயத்தில் நடைபயிற்சி செய்யும் போது காயம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். கூடுதலாக குளிர்ந்த காற்று பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிக மிக ஆபத்தானது. ஆனாலும் நீங்கள் குளிர்காலத்தில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்க்கை போன்ற உடற்பயிற்சி செய்ய விரும்பினால் உங்களுக்காக உதவும் சில முக்கிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
குளிர்காலத்தில் வாக்கிங் செல்லும்போது பின்பற்ற வேண்டியவை :
1. வார்ம் அப் அவசியம் :
நீங்கள் குளிர்காலத்தில் வாக்கிங் அல்லது ரன்னிங் செல்வதற்கு முன் உங்களது தசைகளை தயார்ப்படுத்த வார்ம் அப் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
2. சரியான ஆடை அணியுங்கள் :
குளிர்காலத்தில் வாக்கிங் செல்வதற்கு முன் லேசான அல்லது சூடான ஆடைகளை அணியுங்கள். அதிலும் குறிப்பாக உங்களது காதுகள், தலை மற்றும் கைகளை மூடுவது ரொம்பவே முக்கியம்.
3. நேரத்தை மாற்றுங்கள் :
வானிலை மிகவும் குளிர்ச்சியாகவோ அல்லது பணியாகவோ இருந்தால் விபத்துகள் ஏதேனும் ஏற்படுவதை தவிர்க்க சூரிய உதயத்திற்கு பிறகு சிறிது நேரம் கழித்து நடைப்பயிற்சி செல்லுங்கள்.
4. முக கவசம் அணியுங்கள் :
மாசுபட்ட பகுதிகள் வழியாக நடக்கும் போது சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முகவசம் அணிய மறக்காதீர்கள்.
5. நீரேற்றமாக இருங்கள் :
நடைப்பயிற்சியின் போது அதற்கு பின்னரும் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
6. ஆரோக்கியமான உணவுகள் :
நடைப்பயிற்சிக்கு பிறகு இழந்த சக்தியை மீண்டும் பெற சத்தான உணவை சாப்பிடுங்கள்.
நினைவில் கொள் ;
- சளி, இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருப்பவர்கள் வெளியில் நடைபயிற்சி செல்வதற்கு பதிலாக வீட்டிலேயே செல்வது நல்லது இல்லையெனில், பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
- நடைப்பயிற்சி செய்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு உடனே ஆடைகளை மாற்றாமல் சுமார் 5-10 நிமிடங்களில் இருந்து மாற்றவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.