
பொதுவாகவே சிகரெட் பிடித்தால் நுரையீரல், இதயம் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இதுதவிர புகைப்பிடித்தால் மற்றொரு உறுப்பும் பாதிக்கப்படும் தெரியுமா? அது என்னவென்றால் வாய் தான்.
ஆமாங்க, சிகரெட், ஹூக்கா போன்ற புகையிலை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் பல் சிதைவு, ஈறுகளில் நோய் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக சொல்லப்படுகின்றது. இதனால் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படும். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தாலும் வாய்வழி சுகாதாரம் மிகவும் அவசியம். அப்போதுதான் அபாயங்களை முற்றிலும் குறைக்கவும் ,தவிர்க்கவும் முடியும். எனவே, வாய் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி? வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிகரெட் பிடித்தால் பற்கள் மற்றும் ஈறுகளை எவ்வாறு பாதிக்கும்?
புகைப்பிடிப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாய்வழி சுகாதாரங்கள் :
- புகை பிடிப்பவர்கள் தினமும் இரண்டு முறை ஃப்ளோரைடு இருக்கும் டூத் பேஸ்ட் கொண்டு பல் துலக்க வேண்டும். அதுவும் மென்மையாக. டூத் பேஸ்டில் இருக்கும் ஃப்ளோரைடு பற்களில் இருக்கும் எனாமலை வலுப்படுத்தும். மேலும் பற்களில் துவாரங்கள் ஏற்படுவதை தடுக்கும்.
- தினமும் flossing செய்தால் ஈறு நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
- அதுபோல புகைப்பிடிப்பவர்கள் அல்கஹால் இல்லாத மவுத்வாஷை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது தான் முறையாக பாக்டீரியாக்களை நீக்கும்.
- அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக வாய் வறட்சி பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் பல் சொத்தை ,வாய் துர்நாற்றம் ஏற்படும் அபாயம் குறைக்கும்.
- புகை பிடிப்பவர்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து ஈறுகளில் ஏதேனும் நோய் தொற்றுகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும்.
புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த வாய்வழி சுகாதாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே உதவும். எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டால் அபாயங்கள் ஏற்படுவதை குறைத்து விடலாம். புகை பிடிப்பதை நிறுத்தினால் வாய் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்ல, பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.