இந்தியர்கள் எவ்வளவு தூரம் Walking சென்றால் ஃபிட்டாக இருக்க முடியும்?

Published : Apr 10, 2025, 08:43 PM ISTUpdated : Apr 13, 2025, 11:38 AM IST
இந்தியர்கள் எவ்வளவு தூரம் Walking சென்றால் ஃபிட்டாக இருக்க முடியும்?

சுருக்கம்

வாக்கிங் செல்வது உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் பொருந்தும். ஆனால் ஒவ்வொரு நாட்டின் காலநிலைக்கு ஏற்ப நடக்கும் நேரம், தூரம் ஆகியவற்றை மாற்றி அமைப்பது அவசியமாகும். அனைத்து நாட்டினரும் ஒரே அளவில் தான் வாக்கிங் செல்ல வேண்டும் என்பது தவறான ஒன்று. இந்தியர்கள் எவ்வளவு நேரம் வாக்கிங் செல்ல வேண்டும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.

Healthy Walking tips for Indians: தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என வார்த்தையை அனைவரும் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்திய வாழ்க்கை முறைக்கு இது சரியாக இருக்குமா? ஹெல்த் ஆப்ஸ், ஸ்மார்ட் வாட்ச் எல்லாம் 10,000 என்பதையே இலக்கு மாதிரி சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்திய மக்களின் வாழ்க்கைமுறையும், உணவு முறையும், வேலை முறையும் வேறுபடுகிறது. அதனால் நாமும் அதற்கு ஏற்றது போல் இலக்குகளை மாற்றி அமைத்தால் தான் நம்மால் ஃபிட்டாக இருக்க முடியும்.

வாக்கிங் செல்வதன் அவசியம் :

- வாக்கிங் செல்வதால் உடல் இயக்கங்கள் சீராகிறது.
- மன அழுத்தம் குறைக்கும்
- சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
- மனச் சோர்வையும் தூக்கமின்மையையும் குறைக்கும்.

இந்தியர்களுக்குப் பொருத்தமான வாக்கிங் ஸ்டெப்ஸ் எண்ணிக்கை :

- முக்கிய அடிகள் (Goal-Oriented Walking) : 5,000 முதல் 7,000 அடிகள்: ஒரு சாதாரண ஆரோக்கியம் நிலைமைக்கு ஏற்ப போதுமானது.
- ஆரோக்கிய குறைபாடுகள் உள்ளவர்களுக்கு: முதியோர், ஆரம்ப ஸ்டேஜ் டயபட்டிக், மூட்டு வலி உள்ளவர்கள் – 3,000–5,000 அடிகள் போதும்.
- உடல் எடை குறைக்க விருப்பமுள்ளவர்கள்: தினசரி 8,000–10,000 அடிகள் நடக்க வேண்டும். ஆனாலும், இதை மெதுவாக படிப்படியாக தான் உயர்த்த வேண்டும். முதல் நாள் 3,000 , பத்து நாளைக்கு பிறகு 4,500  இப்படி கட்டுப்பாடுடன் உயர்த்த வேண்டும்.

மேலும் படிக்க: உடல் எடை குறைக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யனும்?

யார் எத்தனை ஸ்டெப் நடக்கணும் ?

- ஆசிரியர் , கிளாஸ் வரை நடப்பது, லேப்க்கு போவது என  6,000 க்கும் அதிகமான ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும்.
- வீட்டில் இருக்கும் பெண்கள், அடுக்குமாடி வீடு, சமையல், பசங்களை பள்ளிக்கு அனுப்பும் என 4,000–6,000 ஸ்டெப்ஸ்.
- IT ஊழியர், டெஸ்க்கில் உட்கார்ந்தே நேரம் கழியும் . அதனால் அவர்கள் சராசரியாக 2,000–3,000 steps. இவர்களுக்கு தான் அதிக கவனம் தேவை.

"எத்தனை அடிகள்?" என எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நாளை, இன்றைய விட கொஞ்சம் கூடுதலா நடக்க வேண்டும் என நினைத்தாலே போதும். மின்னஞ்சலுக்கு பதிலாக நேரில் சென்று பேசலாம். மொபைல், லிஃப்ட் தவிர்த்து, படிகளில் நடந்து போங்க. 

வேகமான சீரான நடை :

- 30 நிமிட நேரம் (சமச்சீர்)
- 6,000 ஸ்டெப்ஸ் (மனசுக்கு ஏற்றது)
- வாரத்திற்கு 5 நாட்கள்
இதெல்லாம் சாதிக்க முடியுமானால், நீங்கள் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

மேலும் படிக்க: நடக்க கூட வேணாம்...உட்கார்ந்த இடத்திலேயே ஈஸியாக உடல் எடையை குறைக்கலாம்

வெறும் வாக்கிங் சென்றால் மட்டும் ஃபிட் ஆகி விட முடியாது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களின் வயது, உடல்நிலைக்கு ஏற்ப சத்தான உணவுகளை, ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு வாக்கிங் முறையாக மேற்கொண்டால் மட்டுமே ஃபிட்டான உடலை பெற முடியும். அதே போல் வாக்கிங் செல்வதற்கு என்றும் சரியான நேரத்தை தேர்வு செய்து கொள்வதும் அவசியம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்