மொறு மொறு பட்டாம்பூச்சி, பூச்சி ஐஸ்கிரீம்! பிரபல உணவகத்தின் மெனு! ஆடிப்போன வாடிக்கையாளர்கள்!

மொறு மொறு பட்டாம்பூச்சி, பூச்சி ஐஸ்கிரீம் என மிச்செலின் உணவகத்தின் மெனு வைரலாகி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.


Michelin restaurant menu is going viral: மிச்செலின் ஸ்டார் உணவகம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். உலகம் முழுவதும் மிச்செலின் உணவகத்தின் கிளைகள் பரந்து விரிந்துள்ளன. இந்நிலையில், டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள மிச்செலின் ஸ்டார் உணவகத்தில் பரிமாறப்பட்ட வித்தியாசமான மெனு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பலரும் சாப்பிட விரும்பாத உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மிச்செலின் ஸ்டார் உணவகம்

Latest Videos

இந்த உணவகத்தில் 700 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.60,000) செலுத்தி சாப்பிட்ட ஒரு பெண் வித்தியாசமான உணவுகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது மிச்செலின் உணவகத்தில் பட்டாம்பூச்சி, பூச்சிகள் மூலம் சமைக்கபப்ட்டு உணவு பன்றி மற்றும் மானின் இரத்தத்தால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், ஆட்டுக்குட்டி மூளை மௌஸ், பூச்சி ஐஸ்கிரீம், ஜெல்லி மீன் சூப், சவப்பெட்டி வடிவிலான சாக்லேட், மீன்களின் முட்டை மற்றும் கோழி தலை ஆகியவை மெனுவில் உள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மெனுப்பட்டியல்

பெண் பகிர்ந்த இந்த மெனு இணையத்தில் வைரலாகி வருகிறது. ''டென்மார்க்கின் அல்கெமிஸ்ட் கோபன்ஹேகனில் மிச்செலின் உணவகத்தில் எனது 5 மணி நேர, $700 மெனுப்பட்டியல் இதோ'' என்று அந்த பெண் கூறியுள்ளார். இந்த இனிப்புப் பதார்த்தத்தில் பன்றி மற்றும் மான் இரத்தத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இரத்தத் துளி உபசரிப்பு இருந்தது. “இது சற்று உலோகச் சுவையுடன் இருந்தது,” என்று அவர் கூறினார்.

தினமும் 30% பழங்கள் சாப்பிடனும்!! சத்குரு சொல்றதோட பின்னணி தெரியுமா?

வழக்கமாக பரிமாறும் உணவு

நெட்டிசன்கள் பலர் இந்த பெண்ணின் கருத்துகளுக்கு வேடிக்கையான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். ''இது நவநாகரீகமானது என்று நீங்கள் அவர்களை நம்ப வைத்தால் மக்கள் உண்மையில் எதையும் சாப்பிடுவார்கள்” என்று சிலரும் “இது அந்த நாட்டில் வழக்கமாக பரிமாறும் உணவு'' என்று வேறு சிலரும் கருத்துகளை கூறி வருகின்றனர். 

இதை எப்படி சாப்பிடுகிறார்கள்?

“பூஞ்சை, பட்டாம்பூச்சிகள், ஜெல்லிமீன்கள், உயிருள்ள பூச்சிகள், ஆட்டுக்குட்டி மூளை, கோழி கால்கள், கோழி தலை என மெனு பட்டியலே பயங்கரமாக இருக்கிறது. இதை எப்படி சாப்பிடுகிறார்கள்? என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை'' என்று பெரும்பாலோனோர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதே வேளையில் ஒரு சிலர், ''இந்த மெனு அனைத்தும் சாப்பிட முடியாத பொருட்கள் என்று கூறினாலும், இவை அனைத்திலும் நல்ல புரதம் உள்ளது'' கூறியுள்ளனர்.

கொலம்பியாவில் கொரோனா தீவு: முன்பதிவு செய்வது எப்படி?

click me!