அம்பானி வீட்டு மருமகள் ராதிகாவின் ஆடையில் இருந்த ஓவியம்- இந்த ஓவிய பின்னணி தெரியுமா? 

Published : Apr 02, 2025, 04:29 PM ISTUpdated : Apr 02, 2025, 04:55 PM IST
அம்பானி வீட்டு மருமகள் ராதிகாவின் ஆடையில் இருந்த ஓவியம்- இந்த ஓவிய பின்னணி தெரியுமா? 

சுருக்கம்

இந்திய நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த தனித்துவமான விவியென் வெஸ்ட்வுட் கோர்செட்டுடன் இணைந்த சந்தேரி சேலை குறித்து இங்கு பார்க்கலாம். 

Radhika Merchant stunning Look in Vivienne Westwood Corset : மும்பையில் நடந்த விவியன் வெஸ்ட்வுட்டின் (Vivienne Westwood) முதல் ஃபேஷன் ஷோவில் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார். ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த இந்நிகழ்வில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட விவியன் வெஸ்ட்வுட்டின்  காப்ஸ்யூல் சேகரிப்பு வெளியிடப்பட்டது. இந்த பேஷன் ஷோவில்  பிரபல நடிகைகளான கரீனா கபூர் கான், மீரா கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இதில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  

ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு 18ஆம் நூற்றாண்டின் அலங்காரத்தை ஸ்டைலிஸ்ட் ரியா கபூர் செய்து அசத்தியிருந்தார். ஷாச்சி ஃபைன் நகைகளுடன், சந்தேரி புடவையின் (Chanderi saree) அழகில் மிளிர்ந்தார், ராதிகா. இந்த பேஷன் ஷோவில் 1990 A/W விவியன் வெஸ்ட்வுட் 'போர்ட்ரெய்ட்' சந்தேரி புடவை கலெக்‌ஷனுடன் இடம்பெற்றது. இந்திய பாரம்பரியத்துடன் பழங்கால அழகு கலந்திருந்தது. 

இதையும் படிங்க:  முகேஷ் அம்பானி குடும்பத்தின் கல்வித்தகுதி என்ன? நிறைய படிச்சது யார் தெரியுமா?

கண் கவர்ந்த ஓவியம்; 

விவியன் வெஸ்ட்வுட்டின் 1990-91களில் உள்ள கலெக்‌ஷன்கள் தனித்துவமானவை. அவைதான் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. ராதிகாவின் உடையில் பிரெஞ்சு கலைஞர் பிராங்கோயிஸ் பவுச்சர் வரைந்த 'டாப்னிஸ் மற்றும் குளோ' ஆயில் பெயிண்ட்டிங் கவனம் ஈர்த்தது. அதுமட்டுமின்றில் ராதிகா கொடுத்த புகைப்பட போஸ்கள் டாப்கிளாஸாக இருந்தன. 

இதையும் படிங்க:  2024ல் அம்பானி குடும்பத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்; முகேஷ் அம்பானி, நீதா அம்பானி இல்ல!

ராதிகா அம்பானியின் அழகு! 

ராதிகா அணிந்திருந்த ஆடையில் இருந்த ஓவியம் காண்போர் கண்களை கவர்ந்தன. அதிக மேக்கப் இல்லாத ராதிகாவின் தோற்றத்தில் இயல்பான பொழிவு கவர்ச்சிகரமாக இருந்தது. இந்திய பாரம்பரியத்துடன் மேற்கத்திய லுக் கலந்து ராதிகா தோற்றமளித்தார். அவர் அதிகமாக மேக்கப் போடவில்லை. ஒரு நெக்கலஸ் (chocker necklace) மட்டும் அணிந்திருந்தார். அதற்கு மேட்சிங் வைர தோடு அணிந்திருந்தார். 

லண்டனை தலைமையிடமாக கொண்ட விவியன் வெஸ்ட்வுட் நிறுவனம், இந்தியாவின் சிறந்த கைவினைஞர் ஜவுளி பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் முதல் ஃபேஷன் ஷோவை நடத்தியது. விவியன் வெஸ்ட்வுட் பிரபலமான பேஷன் டிசைனர் ஆவார். மும்பையில் நடந்த இந்த ஃபேஷன் ஷோவில், கையால் நெய்யப்பட்ட சந்தேரி பட்டு, காதி பருத்தி உள்ளிட்ட பல ஆடைகள் இடம்பெற்றன. அதில் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்டின் ஆடை வெகுவாக கவனம் ஈர்த்தது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்