Pregnancy: குழந்தையின்மை பிரச்சனைக்கு மருத்துவர்கள் சொல்லும் தீர்வு...எப்போது சிகிக்சை தேவை..? முழு விவரம்...

By Anu KanFirst Published Jun 17, 2022, 2:01 PM IST
Highlights

Pregnancy: இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுவதால், தம்பதிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, உடற்பயிற்சி, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர். குறிப்பாக, வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. 

திட்டமிடுங்கள்:

இளம் பருவத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள், இயல்பாக கருத்தரிக்க வாய்ப்புகள் உள்ளன. அவற்றிலும் காலம் தாழ்ந்துவிட்டாலோ அல்லது 30-களை கடந்து திருமணம் செய்து கொண்டவராக இருந்தால், உடனடியாக மருத்துவர்களை அணுகி தம்பதிகள் இருவரும் விந்தணு பரிசோதனை, கர்பப்பை சோதனை செய்து கொள்வது அவசியம். 

சிகிச்சை முறை:

பரிசோதனையில் பிரச்சனைகள் இல்லாதவர்கள், உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இயற்கை முறையில் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம். ஒருவேளை மருத்துவ பரிசோதனையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக சிகிச்சை முறைகளை தொடர்வது அவசியம்.

எப்போது IUI மற்றும் IVF சிகிக்சை தேவை..?
 
குழந்தையின்மை பிரச்சனைக்கு IUI சிகிக்சை முதலில் அவசியம். இதற்கு அடுத்தபடியாக, IVF சிகிக்சை உங்களுக்கு தேவைப்படும். சில மருத்துவமனைகள் ஆரம்பக் கட்டத்திலேயே உங்களை IVF நோக்கி நகர்த்தக் கூடும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தம்பதிகள் முதலில்  IUI  பரிசோதனை செய்து கொண்டால் போதும். 

 மேலும் படிக்க....Infertility: ஆண்களே அலர்ட்...உடல் பருமன் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுமாம்..? புதிய ஆய்வின் ஷாக்கின் ரிப்போர்ட்

click me!