இன்றைய கால கட்டத்தில் நாம் உண்ணும் உணவு முறைகள் கண்டிப்பாக உடல் ரீதியாக பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே...
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம் உடலில் எந்த ஒரு பிரச்சனை என்றால், முதலில் நாம் அறிந்துக்கொள்ள சிறுநீர் சோதனை மிக முக்கிய வகிக்கிறது .
undefined
அதனால் தான் எந்த மருத்துவமனை சென்றாலும் கூட, முதலில் சிறுநீர் பரிசோதனை செய்ய சொல்வார்கள்
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நாட்டு மருத்துவம் கொடுக்கும் நபர்கள் கூட முதலில், பாதிக்கப் பட்டவர் வெளியேற்றும் சிறுநீர் நிறம் என்ன வென்று தான் பார்ப்பார்கள்.
முதலில் நிறத்தை வைத்தே, நமது சிறுநீரகம் எந்த விதத்தில் பாதிப்பு அடைந்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்
சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.
சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.
கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.
இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.