தலைவாழை இலை விருந்தை விரும்பி உண்ணும் வெளிநாட்டினர்... உலகம் போற்றும் தமிழரின் பாரம்பரியம்; வைரல் வீடியோ!

Oct 15, 2018, 3:50 PM IST

எதை எல்லாம் நம்ம மக்கள் பழைய பழக்கம் , நாகரீகம் இல்லாததுனு சொல்லி ஒதுக்குகின்றனரோ அதை எல்லாம் தான் விரும்பி ரசித்து கற்றுக்கொள்ளுகின்றனர் வெளிநாட்டினர். உணவு என்று வந்துவிட்டால் அதில் தமிழர்களில் பாரம்பரியமே தனி தான். அதிலும் அந்த உணவுகளை வைத்து சாப்பிட வாழை இலையை தான் பெரும்பாலும் நம் மக்கள் பயன்படுத்துவர். 

இன்றைய அவசர உலகில் இந்த வாழை இலைக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. பிளாஸ்டிக் இலைகளும், யூஸ் அண்ட் த்ரோ வகை தட்டுக்களும் வாழை இலையின் இடத்தை பிடித்துக்கொண்டன. ஆனால் இந்த வாழை இலையில் உணவு சாப்பிடுவதான் மகத்துவமே தனி தான். பிளாஸ்டிக் இலைகளிலும் , யூஸ் அண்டு த்ரோ தட்டுகளிலும் சூடான உணவை வைத்து சாப்பிடும் போது அந்த பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் கெமிக்கலையும் சேர்த்து தான் சாப்பிடுகிறோ என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. 

அறிந்திருந்தாலும் அவசர உலகம அவற்றின் மீது கவனம் செலுத்த நம்மை அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த வாழை இலையில் உணவை வைத்து உண்ணும் போது அதில் பல நன்மைகள் இருக்கின்றன. சூடான உணவுகளை அதில் வைத்து சாப்பிடும் போது , அந்த உணவே மருந்தாகிவிடுகிறது. இந்த உணவு தோலுக்கு நல்லது. வாழை இலையில் உணவு சாப்பிட்டால் பளபளப்பான தோலை பெறலாம். மேலும் இது ஜீரண சக்தியை கொடுக்கும்.

மேலும் வாழை இலையில் பொதிந்து தரப்படும் உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த அருமை எல்லாம் அறிந்ததாலோ என்னவோ தென் தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர். வாழை இலையில் உணவை வைத்து சாப்பிட அதிக ஆர்வம் கொள்கின்றனர். அப்படி ஒரு குழுவினர் வாழை இலையில் உணவு சாப்பிடும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இந்த வெளிநாட்டினர் வாழை இலை உணவை விரும்பி உண்டதுடன் , குழந்தைகளுக்கு கூட ஊட்டி விட்டு மகிழ்கின்றனர். வாழை இலையில் உணவு உண்பதன் மகத்துவத்தை அறிந்ததாலோ என்னவோ அதை அவர்கள் ரசித்து உண்ணும் விதமும் கூட அழகாகவே இருக்கிறது.