"நம்புங்கய்யா வருவாருய்யா , நாங்கல்லாம் இருக்கோம்ல... எங்கக்கிட்ட பேசுங்கய்யா..." வெங்கய்யா நாயுடு கெஞ்சல்

First Published Nov 29, 2016, 4:44 PM IST
Highlights


ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏழை-நடுத்தர மக்களையே அதிகளவில் பாதித்து வருவதை இந்தியா முழுவதும் காண முடிகிறது. 

கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், உழைத்து சம்பாதிக்கும் மக்களின் நிலையே நாளுக்கு நாள் அவலத்திற்குள்ளாகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக மத்திய-மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் ஆகியோரும் பெரும் நெருக்கடியை சந்திக்க இருக்கிறார்கள்.

மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கும் மாதந்தோறும் ரொக்கமாக வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை இந்த முறை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி அவர்கள், அதற்கு மாற்றாக புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் போதிய அளவில் தயாராக இருக்கிறதா என்பதை கவனிக்கத் தவறியதால் இன்றுவரை பொதுமக்கள் , வியாபாரிகள் , விவசாயிகள் என அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

பிரதமர் மோடியோ ஊர் ஊராக சென்று சுயபுராணாம் பாடி வருகிறார். மோடி இந்த நிகழ்வுக்கு பாராளுமன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஆனால் பிரதமர் பாராளுமன்றத்துக்கு வராமல் ஓடி ஒளிகிறார். 

பல முறை ராகுல் காந்தி முதல் பல எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பியும் பதிலளிக்க இரு அவைகளுக்கும் பிரதமர் வரவில்லை. அதே நேரம் பொதுக்கூட்டங்களில் வீராவேசமாக பேசுவதும் கண்ணீர் சிந்துவதும் எதிர்கட்சிகளை மோசமாக விமர்சிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார். 

வடிவேலு படத்தில் சுந்தர் சி யை அங்கவாடா பார்த்துக்கிறேன் இங்க வாடா பார்த்துக்கிறேன்னு சவால்விட்டு ஓடிவிடுவார். சுந்தர் சியும் அவர் கூப்பிடும் இடத்தில் எல்லாம் எதேச்சையாக போய் நிற்பார். கடைசியில் வடிவேலு காலில் விழுந்துவிடுவார். அது போல் இதுவரை சுத்தி சுத்தி போக்கு காட்டும் பிரதமர் பாராளுமன்றத்துக்குள்ளே நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் , ஆனால் பாராளுமன்றத்துக்கு வராமல் பதுங்குகிறார். 

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற எதிர்கட்சிகள் பிரதமர் வராமல் சபைஅயை நடத்த விடமாட்டோம், எதிர்கட்சிகளை தவறாக விமர்சித்த பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். 

எதிர்கட்சிகளுக்கு நித்யமைச்சர் அருண்ஜேட்லி , பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தும் சபையில் அமளி நீடிக்கிறது. இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளிடம் கெஞ்சிய வெங்கய்ய நாயுடு அய்யா அவரு வருவாருய்யா சொன்னா நம்புய்யா , நாமெல்லாம் பேசிக்கிட்டிருப்போம் அவரு வந்து ஜாயின் பண்ணிக்குவாருய்யா என்று வடிவேலு பாணியில் கெஞ்சினார். 

ஆனாலும் எதிர்கட்சிகள் பிரதமர் வருவதில் பிடிவாதமாக இருப்பதால் இன்றும் சபை நடவடிக்கைகள் முடங்கின. 

click me!