பாலியல் வழக்கில் சிக்கிய உ.பி. அமைச்சர்பிரஜாபதியை கைது செய்ய தடையில்லை -  உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் 

First Published Mar 6, 2017, 7:32 PM IST
Highlights
UP caught in sex case Amaiccarpirajapatiyai arrest bigotry - specifically the Supreme Court


பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தேடப்பட்டு வரும் உத்தரப்பிரதேச அமைச்சர் காயத்ரி பிரஜாபதியை கைது செய்ய தடை விதிக்க முடியாது  என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தாங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு அரசியல் சாயம் பூசுகிறார் பிரஜாபதி என வேதனை தெரிவித்தனர்.

பாலியல் புகார்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலானசமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் காயத்ரி பிரஜாபதி. இவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, பின் கூட்டு பலாத்காரத்திலும் ஈடுபட்டுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கு

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்தும் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது நடவடிக்கை இல்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

பிடிவாரண்ட்

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமைச்சர் பிரஜாபதி, உள்ளிட்ட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரிக்க, மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

இவரின் பாஸ்போர்ட்முடக்கப்பட்டு, ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் 27-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த பிரஜாபதி அதன்பின் தலைமறைவானார்.

பிரசாரம்

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரஜாபதி ஆதரவாளர்கள்பாரதிய ஜனதா அரசு அரசியல் உள்நோக்கத்துடன் புகார் கொடுத்துபிரஜாபதியை உச்ச நீதிமன்றம் மூலம் கைது செய்யத் தூண்டியுள்ளனர் என பேசி வந்தனர்.

மனு

இதற்கிடையே கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி அமைச்சர்பிரஜாபதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், “ தன் மீதான குற்றச்சாட்டுக்கள்  பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. உண்மை நிலையை எடுத்துவைக்க மாநில அரசு தவறிவிட்டது '' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசியல் சாயம்

இந்த மனு நீதிபதி ஏ.கே.சிக்ரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த உத்தரவில், “ பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் மனுவை ஏற்று அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, விசாரணை செய்ய மட்டுமே உத்தரவிட்டுள்ளோம்.

ஒருவேளை பிரஜாபதிக்கு எதிராக ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டு இருந்தால், உரிய நீதிமன்றத்தை அனுகி நிவாரணம் பெறலாம். ஆனால், நாங்கள் பிறப்பித்த உத்தரவுக்குஇப்போது அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது, துரதிருஷ்டவசமானது. இதில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரஜாபதியைகைது செய்யலாமா வேண்டாம் என்பதை முடிவு செய்யலாம்'' எனத் தெரிவித்தனர்.

click me!