ஆந்திராவில் கட்டுக்கட்டாக ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர் லாரிகள்!

By SG BalanFirst Published May 2, 2024, 6:55 PM IST
Highlights

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதனால், ஆந்திராவில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின்போது கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த கண்டெய்னர் லாரிகள் சிக்கின.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் பகுதியில் கட்டுக்கட்டாக ரூ.2,000 ஆயிரம் கோடி பணத்துடன் வந்த 4 கண்டெய்னர் லாரிளை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் இரண்டு கட்டங்கள் மட்டுமே முடிந்துள்ளன. மூன்றாவது கட்டத் தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடக்க உள்ளது.

இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதனால், ஆந்திராவில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின்போது கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த கண்டெய்னர் லாரிகள் சிக்கின.

தேர்ததல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை எடுத்துச் செல்பவர்கள் அந்தப் பணத்திற்குரிய சரியான ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் அதிக பணத்தை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் தேர்தல் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்கின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம், பாமிடி அருகே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 கண்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த லாரிகளில் சுமார் ரூ.2000 கோடி மதிப்பலான மணம் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகருக்கு இந்தப் பணம் கொண்டுசெல்லப்பட இருந்தது தெரிந்தது.

லாரிகளில் வந்தவர்கள் ஆர்பிஐ உத்தரவுடன் கூடிய ஆவணங்களைக் காட்டினர். இதன் மூலம் ரிசர்வ் வங்கி அனுமதியுடன் அந்தப் பணம் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்த அதிகாரிகள் அந்த நான்கு லாரிகளையும் அங்கிருந்து கடந்து செல்ல அனுமதித்தனர்.

click me!