இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 29.05.2023

By Dinesh TGFirst Published May 29, 2023, 7:46 AM IST
Highlights

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 29.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.
 

துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுக ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்

தமிழ் மரபில் ஆதினங்களுக்கு என்று தனித்த அடையாளமும், மரியாதையும் உண்டு. அந்த அடையாளத்திற்கு பெருமை சேர்த்த குன்றக்குடி, பேரூர் போன்ற பல ஆதினங்கள் தமிழையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். அந்த பெருமையை மோடி கிட்ட அடகு வச்சு ஆதின மரபுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதீர்.. மதுரை ஆதீனத்தை விளாசிய ஜோதிமணி

ஜோதிமணி

நடிகரும், இயக்குனருமான மாதவன் தற்போது அபுதாபியில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில், சிறந்த இயக்குனருக்காக விருதை பெற்றுள்ளார்.

மாதவன் - ராக்கெட்டரி

ஐபிஎல் 16வது சீசன் ஃபைனல் மழையால் நடத்த முடியாமல் போனதால் போட்டி மே 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

IPL 2023 Final CSK vs GT

கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

IT அதிகாரிகளை தடுத்த வழக்கு

கர்நாடக மாநிலத்தில் கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடித்ததால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. மேலும் 30 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

கழிவுநீரைக் குடித்து 3 வயது குழந்தை பலி

பாஜக அரசின் மக்கள் விரோத அரசும், கொடுங்கோன்மை ஆட்சியும் வீழ்ந்தொழியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் கருத்து!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யமுனை ஆற்றின் கரையில் தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நபர் நண்பரின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திடீரென சிதையில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.

நண்பனுக்காக தற்கொலை

வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பல பகுதிகளில் காவல்துறை, கமேண்டோகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் பைரன் சிங் கூறியுள்ளார்.

மணிப்பூர் வன்முறை

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது... முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!

மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை கேள்வி

ஐபிஎல் டிராபியில் உள்ள சமஸ்கிருத வாசகத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா? திறமை வாய்ப்புகளை சந்திக்கும் களம் என்பது தான் அர்த்தம் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் டிராபியில் உள்ள சமஸ்கிருத வாசகம்

மே 30-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என கோவை ஈஷா யோகா மையம் கூறியுள்ளது. இதனால், அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஈஷா யோகா

வரும் 1-ம் தேதி வரை கனமழை பெய்யும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா? வானிலை மையம் தகவல்

வானிலை மையம் தகவல்

புதிய நாடாளுமன்றம் பண்டைய மற்றும் நவீன பாரதத்துக்குப் பொருத்தமானது என ஈஷா யோக மையத்தின் தலைவர் சத்குரு பாராட்டி இருக்கிறார்.

சத்குரு பாராட்டு

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்திப் போராடும் மல்யுத்த வீரர் வீராங்கனைளை மோசமாக நடத்தியதை ராகுல் காந்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்

புதிய பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவது "ஜனநாயகத்தின் கோவில்" என்றும் "புதிய இந்தியாவின் கனவுகளின் பிரதிபலிப்பு" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

புதிய பாராளுமன்றத்தில் மோடியின் முதல் உரை

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பிரதமர் மோடி தனது முடிசூட்டு விழாவாகக் கருதுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி விமர்சனம்

ஜப்பானில் டோக்கியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் மொழியைக் காப்பது தமிழர்களைக் காப்பதாகும் என்று கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் பேச்சு

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை, சிறுமிகள் கொடுத்த ஆடியோ வீடியோ வாக்குமூலங்கள் ஆணையத்தில் உள்ளது திங்கள்கிழமை ஆளுநரையும் அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை.!

click me!