மணிப்பூரில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: முதல்வர் பைரன் சிங் தகவல்

By SG BalanFirst Published May 28, 2023, 7:08 PM IST
Highlights

மணிப்பூரில் இன்று பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் பிரேன் சிங் கூறியுள்ளார்.

வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பல பகுதிகளில் காவல்துறை, கமேண்டோகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் பைரன் சிங் கூறியுள்ளார்.

"பயங்கரவாதிகள் தாக்குதலின்போது M-16, AK-47, ஸ்னைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். பல கிராமங்களில் வீடுகளுக்கு தீ வைத்து எரிக்க முயன்றனர். ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். அதில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன" என பைரன் சிங் கூறினார்.

"ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்" என பைரன் சிங் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் இம்பால் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐந்து பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்கள் குரலை நசுக்கும் ஆணவம் பிடித்த மன்னன்! மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட்

செக்மாய், சுக்னு, கும்பி, ஃபாயெங் மற்றும் செரோ உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கேட்பாரற்று தெருக்களில் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில தலைநகர் இம்பாலில் உள்ள பிராந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (RIMS) மருத்துவர்கள் ஃபாயெங்கில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

குமந்தெம் கென்னடி, என்ற 27 வயது இளைஞர் பிஷன்பூரின் சந்தோன்போக்பியில் துப்பாக்கிச்சூட்டின் போது கொல்லப்பட்டார் எனவும் அவரது உடல் இம்பாலில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளனர். இதேபோல இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் இம்பால் பள்ளத்தாக்கின் புறநகர்ப் பகுதியில் பொதுமக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. இது திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மணிப்பூர் அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.

தமிழைக் காப்பது தமிழினத்தைக் காப்பதாகும்: ஜப்பானில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூர் செல்ல உள்ளார். மாநிலத்தில் அமைதியைப் பேணுமாறும், இயல்பு நிலையை திரும்ப உழைக்குமாறும் மெய்தி மற்றும் குக்கிகள் சமூகத்தினருக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயும் நேற்று மணிப்பூருக்குச் சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்துவருகிறார்.

பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து கோரும் மெய்தி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசித்துவரும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மே 3ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் மோதலில் கிட்டத்தட்ட 70 பேர் வரை பலியாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை முடங்கியுள்ளது.

தேர்வுகளில் ChatGPT பயன்படுத்தியதால் ஒரே விடையை எழுதி மாட்டிக்கொள்ளும் மாணவர்கள்!

click me!