டவுசருடன் சட்டப்பேரவைக்கு சென்ற எம்எல்ஏ – மக்கள் பிரச்சனையை தீர்க்காத்தால் ஆத்திரம்

First Published Nov 29, 2016, 9:49 AM IST
Highlights


மக்கள் பிரச்சனையை மாநில அரசு நிறைவேற்றாத்தால், ஆத்திரமடைந்த எம்எல்ஏ, சட்டப்பேரவைக்கு டவுசருடன் சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பீஹார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இங்கு, லவுரியா தொகுதி, பாஜக எம்எல்ஏவாக பினாய் பிஹாரி உள்ளார்.

இதையொட்டி, பினாய் பிஹாரி, தனது தொகுதியில் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடப்பதை கண்டித்து, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால், அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. எவ்வித நடவடிக்கைம் எடுக்கவில்லை.

இந்நிலையில் பினாய் பிஹாரி, அரசு மீதுள்ள தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், அரைக்கால் சட்டை மற்றும் பனியன் அணிந்து கொண்டு, மாநில சட்டப்பேரவைக்கு சென்றார். இதை பார்த்ததும், அங்கிருந்த மற்ற எம்எல்ஏக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“அரைகுறை ஆடை அணிந்து வருவது, சட்டசபையின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்” என கூறி, அவரை சட்டப்பேரவைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அவரது தொகுதி பிரச்சனையை எழுப்ப அனுமதிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியது. ஆனால், சபாநாயகர் அதனை ஏற்கவும் இல்லை. அவரை அனுமதிக்கவும் இல்லை.

click me!