அமேதியில் இருந்து விலகிய காந்தி குடும்பம்.. ரேபரேலியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி..

By Ramya s  |  First Published May 3, 2024, 8:49 AM IST

உத்தரபிரதேசத்தின் பாரம்பரிய காந்தி குடும்ப தொகுதியான ரேபரேலியில் இருந்து ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 


பல வார ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தை பிறகு, உத்தரபிரதேசத்தின் பாரம்பரிய காந்தி குடும்ப தொகுதியான ரேபரேலியில் இருந்து ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

இரண்டு தசாப்தங்களாக நேரு-காந்தி குடும்பத்தின் செல்வாக்குமிக்க பிரதிநிதியாக இருந்து வரும் கிஷோரி லால் சர்மாவை அமேதியில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

7 கட்டமாக நடைபெறு மக்களவை தேர்தலில் 5-வது கட்டமாக மே 20-ம் தேதி ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்!

இந்த லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட தயங்குவதால், ராகுல் காந்தி போட்டியிட ஒப்புக்கொண்டதாகவும், 2004 முதல் அவரது தாயார் சோனியா காந்தி பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியான ரேபரேலியில் போட்டியிடலாம் என்றும் சில தலைவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது..

முன்னதாக ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில் இதுகுறித்து கூறியிருந்தார். அப்போது பேசிய அவர் “காங்கிரஸின் இளவரசர் வடக்கில் இருந்து ஓடிப்போய் தெற்கில் தஞ்சம் புகுந்தார். வயநாடுக்குப் புறப்பட்டார். இம்முறை தனக்கென வேறு ஏதாவது தொகுதியை அறிவிக்கக் காத்திருக்கிறார். இதுதான் அவரின் நிலை. வயநாட்டில் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன், அவருக்கு மற்றொரு தொகுதி அறிவிக்கப்படும். வேறு இருக்கை தேடுகிறார். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...” என்று கூறியிருந்தார்.

2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையும் ஸ்மிருதி இரானியும் தனது வெற்றியை தக்கவைத்து கொள்வார் என்று கூறப்படுகிறது. 

பிரியங்கா காந்தி வதேரா இந்த  போட்டியிடுவதில்லை என்ற முடிவு கட்சிக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இது நாடு முழுவதும் தேர்தல் முடிவைப் பிரதிபலிக்கும் வகையில் எதிர்மறையான கருத்தை உருவாக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் கருதுகின்றனர். இன்னும் 353 தொகுதிகளில் வாக்குப்பதிவு எஞ்சியுள்ள நிலையில், காங்கிரஸ் 330 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அதனை வாரிசு அரசியல் பற்றிய பாஜகவின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி தயக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பில் மறுஆய்வு: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.சுதந்திரம் பெற்றதில் இருந்து அமேதி மற்றும் ரேபரேலியை காங்கிரஸ் 3 முறை மட்டுமே இழந்துள்ளது. 1977ல் ரேபரேலியில் முதன்முறையாக இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்குப் பிந்தைய தேர்தலில் ராஜ் நரேனிடம் தோல்வியடைந்தபோது முதன்முறையாக தோல்வியை சந்தித்தது. 1996 மற்றும் 1998 இல் மீண்டும் தொகுதியை இழந்தது, ஆனால் அதன் பின்னர் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததில்லை. அதே போல், 1977, 1998 மற்றும் 2019ல் அமேதியில் காங்கிரஸ் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!