மீண்டும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரானார் சுரேஷ் கல்மாடி… ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு பதவியா? கடும் எதிர்ப்பு…

First Published Dec 28, 2016, 1:28 PM IST
Highlights


இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கல்மாடியை, மீண்டும் ஒலிம்பிக் சங்க தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் வருடாந்திர பொதுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர், இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால புரவலர் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பதவி வகித்த சுரேஷ் கல்மாடி, டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் பல கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 10 மாதம் சிறையில் இருந்து, பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

click me!