தொழில்நுட்பக் கோளாறு அவசரமாக டெல்லி திரும்பிய இண்டிகோ விமானம்!

Published : Apr 27, 2024, 07:52 PM IST
தொழில்நுட்பக் கோளாறு அவசரமாக டெல்லி திரும்பிய இண்டிகோ விமானம்!

சுருக்கம்

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் அதில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

170 பயணிகளுடன் அகமதாபாத் செல்வதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கே திரும்பி, அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-129 விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 170 பேர் இந்த விமானத்தில் இருந்தனர்.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் மதியம் 2.40 மணிக்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் அதில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்க போன் டிஸ்ப்ளேயில் பச்சை கலர்ல கோடு தெரியுதா? இலவசமாவே ஸ்கிரீனை மாத்திக்கலாம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!