பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார்.. தொழிலை வைத்து யாரையும் மதிப்பிட கூடாது.. உச்ச நீதிமன்றம் உத்தரவு..

By Thanalakshmi VFirst Published May 20, 2022, 11:37 AM IST
Highlights

பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தொழிலை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

பாலியல் தொழிலாளர்களுக்கு அரசின் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர் கவாய் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, கொரோனா காலக்கட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் பாலியல் தொழிலாளர்களும் அதிக பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே இவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

மேலும் படிக்க: palm oil price: பெண்களுக்கு நிம்மதி! சமையல் எண்ணெய் விலை குறையப்போகுது: காரணம் இதுதான்..

மேலும்  NACO (National AIDS Control Organisation) மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் பட்டியல்களை சரிபார்த்த பிறகு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும் பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை தெரிவிக்காமல் மாநில அரசுகள் தொடர்ந்து ரேஷன் உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தனர். இதுக்குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தரப்பில், மாநில சுகாதார அதிகாரியிடமிருந்தோ, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பிடமிருந்தோ சான்றிதழ் பெறும்பட்சத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தது. 

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு மூன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் `தொழிலை வைத்து யாரையும் பிரித்து பார்க்க முடியாது’ எனவும் `அவர்களும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது என்ற அடிப்படையில், பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” கொரோனா பாதிப்பின் போது இந்தியாவே 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீதிமன்றம் அறிகிறது. அதனடைபடையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்' என உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர். 

மேலும் படிக்க: CUET PG 2022: கவனத்திற்கு.. இந்தெந்த படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு.. அறிவித்தது யுஜிசி..

click me!