மதிய உணவு திட்டம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...!!!

First Published Aug 22, 2017, 7:14 AM IST
Highlights
supreme court notice to tamilnadu government


நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ்மதியஉணவுத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள்?, சுகாதாரமாக எப்படி வழங்குகிறீர்கள்?, கண்காணிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதிய உணவுத் திட்டத்தை சுகாதாரமான முறையில் வழங்கவும், கண்காணிக்கவும் தேசிய, மாநில அளவில் குழுக்கள் அமைப்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

கடந்த 2013ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப்பள்ளியில் கெட்டுப்போன மதிய உணவை சாப்பிட்ட 23 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து, மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கவும், இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதைத் தடுக்கவும் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி ‘அந்தராஷ்ட்ரியா மனவ் அதிகார் நிகராணி’ எனும் தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ந்ேததிபிறப்பித்த உத்தரவில், “ மதிய உணவு திட்டத்தில் எத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பது குறித்த விவரங்களை 3 மாதங்களுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டது.

மதிய உணவு திட்டம் எத்தனை பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது, பயணாளிகள் எத்தனை  பேர்,  தரம், சத்துக்களின் அளவு, தானியங்கள், காய்கறிகள், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்ளின் விவரங்களை அளிக்கவும், இணையதளத்தில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது’’

இந்த விவரங்களை 25 மாநிலங்கள் தாக்கல் செய்தன, ஆனால், 11 மாநிலங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஓய்சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-

 மதிய உணவுத் திட்டத்தை கண்காணிக்க ஏதேனும் திட்டங்கள் வைத்துள்ளீர்களா?, உணவின் தரம் அரசு பள்ளிகளில் எவ்வாறு இருக்கிறது? என்பதை கண்காணிக்க குழு இருக்கிறதா? என்பதையும் மாநிலங்கள் தகவல் அளிக்க வேண்டும்.

மதிய உணவின் சுகாதாரம், பீகாரில் குழந்தைகள் இறந்தது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும். மதிய உணவுத் திட்டத்தை சுகாதாரமான முறையில் வழங்கவும், கண்காணிக்கவும் தேசிய, மாநில அளவில் குழுக்கள் அமைப்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இணையதளத்தில் மதியஉணவு திட்டங்கள் குறித்து விவரங்களை பதிவேற்றம் செய்யாத தமிழகம் ,கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு நோட்டீஸ்அனுப்ப  ஆணையிட்டது.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்தனர்.

click me!